ஆண்களுக்கான இளமை ரகசியம்!----ஹெல்த் ஸ்பெஷல்

...

ஆண்களில் சிலரை பார்த்தால், வயது 50 அல்லது 60 ஐ தாண்டினாலும், என்றும் மார்க்கண்டேயனாகவே தோற்றமளிப்பர். . இந்த மார்க்கண்டேய தோற்றத்தை தக்கவைத்துக்கொள்வது ஒன்றும் பெரிய கம்ப சூத்திரமோ அல்லது பிரம்ம வித்தையோ அல்ல....! மாறாக கொஞ்சம் மெனக்கிட்டால் வயது ஏறிக்கொண்டு போனாலும், குறைந்த வயது தோற்றத்துடன் நீண்ட காலம் இருக்க முடியும். நமது வயதை முதலில் வெளிப்படுத்துவது சருமம் தான், அதனை ஒழுங்காக, சீராக பராமரித்தாலே நமது ஆயுட் காலமும் நீடித்து இருக்கும். அப்படி என்றும் இளமையுடன் இருக்க இதோ சில டிப்ஸ். . . ! . நாம் அதிகமாக சூரிய வெளிச்சத்தில் பயணிப்பதாலும், எண்ணெய் அதிகமுள்ள உணவுகளை உட்கொள்வதாலும், மாசுள்ள காற்றை சுவாசிப்பதாலும் நமது சருமத்தில் முதுமை தோற்றம் தெரிகிறது. இதனை தடுக்க, சிறந்த முதுமை தடுப்பு (ஆன்டி ஏஜிங்) தயாரிப்புகளை பயன்படுத்தவது நல்லது. மேலும் அதிகமான தண்ணீர் பருகுதல் சருமத்தை பாதுகாக்கும். பெண்களின் சருமத்தை காட்டிலும் ஆண்களின் சருமம் 20 விழுக்காடு கூடுதல் கடினத்தன்மையுடன் இருக்கும். ஆயினும் வயது கூடும்போது கொல்லாஜன் எனும் புரதம் குறைவதால் சருமத்தில் சுருக்கம் ஏற்படுகிறது. உடல் கூறுவியலின்படி பெண்களை காட்டிலும் ஆண்களின் முதிர்ச்சி சில காலத்திற்கு பிறகு தான் தோன்றும், ஆனால் ஒரு சில பழக்கவழக்கங்களினால் ஆண்களுக்கு இயல்பான வயதை காட்டிலும் முதுமையான தோற்றம் காணப்படுகிறது. தொடர்ந்து ஷேவிங் செய்வதன் காரணமாக முகத்தில் முதிர்ச்சி தோன்றும், அதனால் ஈரப்பதத்துடன் கூடிய ஷேவிங் கிரீமை பயன்படுத்துவது நல்லது. மேலும் ஷேவிங் செய்யும்போது முடிகள் வளர்ந்திருக்கும் திசையில் ஷேவ் செய்து, வெதுவெதுப்பான தண்ணிரால் முகத்தை கழுவ வேண்டும். அவ்வாறு செய்தால் முகம் வாடாமல் புத்துணர்ச்சியுடன் தோன்றும். ஆண்கள் என்றும் இளமையுடன் இருக்க தொடர்ந்த உடற்பயிற்சியும் பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள், உடலுக்கு குளிர்ச்சி தரும் இறைச்சிகள் மற்றும் மீன் போன்ற ஆரோக்கிய உணவுகளை உட்கொள்ள வேண்டும். உடல் திசுக்களை புதுப்பிக்கும் திறனுடைய ஆன்டிஆக்ஸிடன்ட் குணம் நிறைந்த பேக் செய்யப்பட்ட உணவுகளை உட்கொள்வதால், முகம் சுருக்கம் இல்லாமலும் மென்மையாகவும் காணப்படும். மேலும் பசலை கீரை, அவுரிநெல்லிகள், கேரட், தக்காளி, பச்சை தேநீர் போன்றவற்றையும் சேர்த்துகொள்வது மிகவும் நல்லது. சருமத்தை இளமையுடன் வைத்திருக்க மது மற்றும் புகைப்பிடித்தலை தவிர்க்கவும். சிகரெட்டுகளில் உள்ள நிக்கோட்டின் உடலின் இரத்த ஓட்டத்தை குறைப்பதால் சருமத்திற்கு தேவையான சத்துகள் சென்று அடைவதில்லை, ஆகையால் சுருக்கங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. தூக்கம் கெடுவதால் உடல்நிலை பெரிதும் பாதிக்கப்படும் என்பதை அநேகமானோர் அறிவதில்லை. இரவில் குறைந்தது 6-7 மணி நேர ஆழ்ந்த உறக்கம் அவசியம் என்பதும் இதைத் தொடர்ந்து கடைபிடித்து வந்தால் மனதில் புத்துணர்ச்சி மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்திலும் குறிப்பாக சருமத்திலும் பொலிவு ஏற்படும். இது தவிர, உடல் ஆரோக்கியத்திற்கும், உடலுறவு பழக்க வழக்கத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதால், அதுகுறித்த விழிப்புணர்வை கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும். இவையெல்லாவற்றிற்கும் மேலாக, ஆண்கள் தனது கவலைகளை மறந்து மகிழ்ச்சியுடன் இருந்தாலே, முகத்தில் பொலிவும் இளமையும் கூடிக்கொண்டே போகும். . . !

Related

ஹெல்த் ஸ்பெஷல் 670691194882820570

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item