வேர்க்கடலை கட்லெட்---சமையல் குறிப்புகள்

வேர்க்கடலை கட்லெட் தேவையானவை: வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலை - 2 கப், பொட்டுக்கடலை மாவு - அரை கப், பொடித்த வெல்லம் - ஒரு டீஸ்பூன், கடலை ...

வேர்க்கடலை கட்லெட் தேவையானவை: வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலை - 2 கப், பொட்டுக்கடலை மாவு - அரை கப், பொடித்த வெல்லம் - ஒரு டீஸ்பூன், கடலை மாவு - அரை கப், அரிசி மாவு - கால் கப், கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், உருளைக்கிழங்கு - 3, வெங்காயம் - 2, பச்சை மிளகாய் - 5, பொடியாக நறுக்கிய இஞ்சி - பூண்டு - ஒரு டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - கொத்தமல்லி - கைப்பிடி அளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: உருளைக்கிழங்கை வேக வைத்து, தோலுரித்து மசித்துக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வேர்க்கடலையை மிக்ஸியில் கரகரப்பாக பொடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து... பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி, கறிவேப்பிலை முதலியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும். அதனுடன் பொடி செய்த வேர்க்கடலை, உருளைக்கிழங்கு, உப்பு சேர்த்து சுருள வதக்கி இறக்கவும். இந்தக் கலவை ஆறியவுடன் சிறு சிறு வடைகளாகத் தட்டிக் கொள்ளவும். பொட்டுக்கடலை மாவு, கடலை மாவு, அரிசி மாவு, கரம் மசாலா, பொடித்த வெல்லம், உப்பு சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்து வைத்துக் கொள்ளவும். தட்டிய வடைகளை அதில் தோய்த்து, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். தக்காளி சாஸ் இதற்கு சரியான சைட் டிஷ்! வேர்க்கடலை கட்லெட்: இரண்டு, மூன்று பிரெட் ஸ்லைஸ்களை மிக்ஸியில் பொடித்து சேர்த்தால், க்ரிஸ்பியாக இருக்கும்.

Related

சமையல் குறிப்புகள் 7596646970788490126

Post a Comment

1 comment

கோமதி அரசு said...

வேர்க்கடலை கட்லெட் செய்துப் பார்த்து விடுகிறேன்.
நன்றி.

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement


Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள். சிந்தனை துளிகள். இந்த நாள் இனிய நாள் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம்! முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item