பெண்களின் அழகைக் குலைக்கும் 'செலுலைட்'!.....ஹெல்த் ஸ்பெஷல்,

பெண்களுக்கு அதிகப்படியாக கொழுப்பு சேரும் இடம், தொடை, இடுப்பு மற்றும் பின் பகுதி தான்! `குழி விழுந்த', `மேடு பள்ளமான' தோற்றத்தை தர...

பெண்களுக்கு அதிகப்படியாக கொழுப்பு சேரும் இடம், தொடை, இடுப்பு மற்றும் பின் பகுதி தான்! `குழி விழுந்த', `மேடு பள்ளமான' தோற்றத்தை தரும். இந்த கொழுப்புக்கு பெயர் தான் செலுலைட். எதனால் செலுலைட் உருவாகிறது? எண்ணையில் பொரித்த உணவு, மது, கஃபைன் ( காபியில் உள்ளது) சர்க்கரை ஆகியவை செலுலைட் உருவாக முக்கிய காரணம். அத்தோடு, ஹார்மோன் மாத்திரைகள் சாப்பிடுவது, பரம்பரையாக வருவது, உடற்பயிற்சி அதிகம் இல்லாதது, இவற்றாலும் செலுலைட் உருவாகிறது. செலுலைட்டை ஒழிப்பது எப்படி? செலுலைட்டை ஒழிக்க இரண்டு வழிகள் உண்டு. 1. இயற்கை வழி: உடற்பயிற்சி வருவதற்கு முன் காப்பது நல்லது, என்பதை மறந்து விடாதீர்கள். கொழுப்புச் சத்து உள்ள உணவை சாப்பிட்டு விட்டு உடற்பயிற்சி செய்தால் பயனில்லை. உடற்பயிற்சியால் தற்போது இருக்கும் செலுலைட்டை தான் குறைக்க முடியும். உணவு கட்டுப்பாட்டால் தான் செலுலைட் உருவாகுவதை தடுக்கலாம். எடை குறைக்க பத்து நாள் பட்டினி கிடந்தால் பயனில்லை. இந்த வகையான டயடிங் உங்கள் தசைகளை குறைத்து உங்களை பலவீனமாக்கும். கொழுப்பு அப்படியே தங்கிவிடும். வறுத்த, பொரித்த உணவுப் பொருட்கள், நெய், அசைவ உணவு ஆகியவற்றை சாப்பிடுவது குறைத்துக் கொள்ள வேண்டும். ஒரு வாரத்தில் மூன்று நாட்களாவது 1/2 மணி நேரத்திற்கு உடற்பயிற்சி செய்தால் தான் பயனளிக்கும் தண்ணீர் குடிப்பது குறைந்தாலும் செலுலைட் உருவாகும். அதனால் தினமும் 10௧2 டம்ப்ளர் தண்ணீர் குடிப்பது நல்லது. பிரஷ்:- நம் முன்னோர்கள் தேங்காய் நாறால் உடலை தேய்த்து குளிப்பது வழக்கம். இது எந்த அளவுக்கு நம் உடலுக்கு நல்லது என்பது இன்று நிரூபிக்கப்பட்டுள்ளது. தேங்காய் நாறை, உடலை தேய்க்கும் பிரஷ் போல் உபயோகிக்கவும். பிளாஸ்டிக் பிரஷை விட இது பன்மடங்கு சிறந்தது. செயற்கை முறை:- லைபcஅக்சன் :- இந்த முறையில் ஒரு சின்ன டியூப்பை கொழுப்பு இருக்கும் இடத்தில் விட்டு, கொழுப்பு உறிஞ்சப்படுகிறது. இதனால் கொழுப்பு குறைந்தாலும் வளவளப்பான தோற்றத்தை அந்த இடம் இழந்து விடுகின்றது. அது மட்டுமல்லாமல் இதில் அதிகமாக வலி ஏற்படும். ஒரு மாதம் வரை தழும்புகள் நீடிக்கும். சுவையான குறிப்பு:- இது பெரும்பாலும் பெண்களுக்கு ஏற்படுகின்றது. ஆனால் ஆண்கள் அதிர்ஷ்டசாலிகள் என்று நினைக்க வேண்டாம்! ஆண்களைப் போல் நமக்கு வழுக்கை ஏற்படுவது இல்லையே என்று நினைத்து சந்தோஷப் படி வேண்டியது தான்!

Related

ஹெல்த் ஸ்பெஷல் 7754395869181276627

Post a Comment

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம்! முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item