ரவா இட்லி--சமையல் குறிப்புகள்
தேவையானப்பொருட்கள்: ரவை - 2 கப் கெட்டி தயிர் - 2கப் சோடா உப்பு - ஒரு சிட்டிகை பச்சை மிளகாய் - 5 அரைத்து கொள்ளவும் தாளிக்க : எண்ணெய் - தேவைய...
https://pettagum.blogspot.com/2012/01/blog-post_5748.html
தேவையானப்பொருட்கள்:
ரவை - 2 கப்
கெட்டி தயிர் - 2கப்
சோடா உப்பு - ஒரு சிட்டிகை
பச்சை மிளகாய் - 5 அரைத்து கொள்ளவும்
தாளிக்க :
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு - 1 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்
கடலை பருப்பு - 1 1/2 ஸ்பூன்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
செய்முறை:
தாளிக்க கொடுத்துள்ள பொருள்களை தாளிக்கவும்.
ரவையையும் தயிரையும் நன்றாக கலக்கவும்.
பச்சை மிளகாய் அரைத்த விழுதை சேர்க்கவும்.
தாளித்த பொருட்களை சேர்க்கவும்.
சோடா உப்பை சேர்க்கவும்.
தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
அனைத்தையும் நன்றாக கலக்கவும்.
இட்லி ஊற்றும் பதத்திற்கு வேண்டுமானால் தண்ணீர் சிறிதளவு சேர்க்கலாம் முந்திரியை வறுத்தும் சேர்க்கலாம். இட்லி தட்டில் ஊற்றி10 நிமிடங்கள் கழித்து இறக்கவும். சூடான ரவை இட்லி தயார்.
Post a Comment