மிக்ஸ்டு ஃப்ளவர் சூப் தேவையானவை: முருங்கைப்பூ, ஆவாரம்பூ, செம்பருத்திப்பூ (கலந்தது) - ஒரு கப், பாசிப்பருப்பு - கால் கப், மஞ்சள்தூள், மிளகு...
மிக்ஸ்டு ஃப்ளவர் சூப்
தேவையானவை:
முருங்கைப்பூ, ஆவாரம்பூ, செம்பருத்திப்பூ (கலந்தது) - ஒரு கப், பாசிப்பருப்பு - கால் கப், மஞ்சள்தூள், மிளகுத்தூள் - தலா அரை டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
பாசிப்பருப்புடன் மஞ்சள்தூள், சுத்தம் செய்த முருங்கைப்பூ, ஆவாரம்பூ, செம்பருத்திப்பூ ஆகியவற்றைச் சேர்த்து குக்கரில் வேக வைக்கவும். வெந்ததும் வடிகட்டி... உப்பு, மிளகுத்தூள் சேர்த்துக் கலக்கவும். கொத்தமல்லி தூவி சூடாகப் பரிமாறவும்.
அல்சர் பிரச்னை இருப்பவர்களுக்கு இது சிறந்த கை மருந்து!
மிக்ஸ்டு ஃப்ளவர் சூப்: சிறிதளவு துவரம்பருப்புடன் வெந்தயம் சேர்த்து வேக வைத்து சேர்த்தால் புரோட்டீன் சத்தும், சுவையும் கூடும்.
Post a Comment