சாப்பாட்டைப் பார்த்தாலே குமட்டிக் கொண்டு வரும். இதற்கு எளிய வழி! --மருத்துவ டிப்ஸ்
* ராத்திரி முழுவதும் கண் விழித்து பரீட்சைக்குப் படித்ததெல்லாம் தேர்வு முடிந்த பின்னால்தான் படுத்த ஆரம்பிக்கும். ஆம், அதுதான் பித்தம். சாப்பா...
https://pettagum.blogspot.com/2012/01/blog-post_3973.html
* ராத்திரி முழுவதும் கண் விழித்து பரீட்சைக்குப் படித்ததெல்லாம் தேர்வு முடிந்த பின்னால்தான் படுத்த ஆரம்பிக்கும். ஆம், அதுதான் பித்தம். சாப்பாட்டைப் பார்த்தாலே குமட்டிக் கொண்டு வரும். இதற்கு எளிய வழி உண்டு. 100 கிராம் சீரகத்தை எடுத்துக்கொள்ளுங்கள். நான்கு பெரிய எலுமிச்சம் பழங்களைப் பிழிந்த ரசம் எடுத்து, அதில் இந்தச் சீரகத்தை இரண்டு நாள் ஊற வையுங்கள். ரசம் நன்றாக சீரகத்தில் ஏற வேண்டும். வாயில் போட்டுப் பார்த்தால் தெரியும். பிறகு ஊறிய சீரகத்தை எடுத்து வெயிலில் உலர்த்த வேண்டும். நன்றாக உலர்ந்ததும், காற்றுப்புகாத பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளவும். பித்தம் அதிகமாகி, குமட்டிக் கொண்டு வரும்போது, ஒரு ஸ்பூன் சீரகத்தை எடுத்து வாயில் அடக்கிக் கொண்டால் பித்தம் தானாக குறையும்.
1 comment
நல்ல மருந்து.நன்றி.
Post a Comment