பழங்களின் பயன்கள்! கூல்பெரீஸ்:-புளூபெரிஸ்:-ஸ்ட்ராபெரீஸின் நன்மைகள்:

இவைகளை சாப்பிட்டு இருக்கிறீர்களா? கண்ணைக் கவரும் கலர்கலரான பெர்ரீஸ் பழவகைகளான ஸ்ட்ராபெரீஸ், புளுபெரீஸ், கூஸ்பெரீஸ் மற்றும் ரஸ்ப்பெரீஸ் ஆகியவ...

இவைகளை சாப்பிட்டு இருக்கிறீர்களா? கண்ணைக் கவரும் கலர்கலரான பெர்ரீஸ் பழவகைகளான ஸ்ட்ராபெரீஸ், புளுபெரீஸ், கூஸ்பெரீஸ் மற்றும் ரஸ்ப்பெரீஸ் ஆகியவை இயற்கையிலேயே இனிப்புச்சுவை கொண்டவை. அதோடு பார்வைக்கு அழகோடு தேகத்துக்கு சத்தும் தரும் இப்பழங்கள் ஒவ்வொன்றிலும் அடங்கியுள்ள ஊட்டச்சத்து வகைகளை ஊட்டச்சத்து நிபுணர்கள் பட்டியலிடுகிறார்கள். ஸ்ட்ராபெரீஸின் நன்மைகள்: ஒரு கப் ஆரஞ்சுப்பழ ஜுஸ் தரக்கூடிய 100 மில்லிகிராம் வைட்டமின் சி ஊட்டச்சத்து ஸ்ட்ராபெரீஸ் பழம் ஒவ்வொன்றிலும் அடங்கியுள்ளது. வைட்டமின் சி சத்து மட்டுமன்றி கால்சியம், மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் சத்தும் நிறைந்தவை. இம்ïனிட்டி எனப்படும் நோய் எதிர்ப்புச் சக்தி மிக்கவை. நமது உடலில் உள்ள கை.கால் தசைநார்களின் வளர்ச்சிக்கு ஆதாரமாக உள்ள காலஜென், எலஸ்ட்டின் போன்ற நார்ச்சத்து புரோட்டீன்கள் மற்றும் ரெட்டிகுலின் எனப்படும் எலும்புமஜ்ஜை சிவப்பணுச் சக்தியை ஊக்குவிக்கும் ஊட்டச் சத்தாகத் திகழ்கிறது. சாப்பாட்டிற்குப்பின் உண்ணும் பழவகைகளுள் இது முக்கியமானது. துண்டு துண்டாக நறுக்கிய ஸ்ட்ராபெரீஸ் பழங்களை ஒரு கப் செரிலாக்குடன் கலந்து எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து சாப்பிடலாம். இதன்மூலம் நமது உடலுக்கு 53 கலோரி வெப்பச்சக்தி கிடைக்கிறது! புளூபெரிஸ்: இதில் உள்ள வைட்டமின் சி சத்து மற்றும் தாது உப்புக்கள் புற்றுநோய் வராமல் பாதுகாக்கிறது. பித்தப்பை கோளாறுகள் வராமல் காக்கிறது. மூளைக்குச் செல்லும் ரத்த நரம்புத் தந்துகிகளில் `ஸ்ட்ரோக்' எனப்படும் ரத்தக்கசிவு ஏற்படாமல் பாதுகாக்கிறது. இருதயம் சம்பந்தமான நோய்கள் வராமல் பாதுகாக்கிறது. கண்களில் மஞ்சள் நிற கேட்ராக்ட் நோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது. பழங்களை மசியல் செய்து ஒரு கப் ஐஸ்கிரீமுடன் இணைத்துச் சுவைக்க, நமது உடலுக்கு 83 கலோரி வெப்பச்சத்தி கிடைக்கிறது! நாம் உண்ணும் உணவு நன்கு ஜீரணமாகி குடல் உறிஞ்சிகளால் உறிஞ்சப்பட்டு உட்கிரகிக்கப்பட்டு ரத்தத்துடன் கலக்க உதவுகிறது. ஈரல் பாதுகாப்பிற்கும் மற்றும் இருதயம் சம்பந்தமான நோய் வராமல் பாதுகாப்பதற்கும் துணை புரிகிறது. நுரையீரல்களை வலுவாக்கி வளமுறச் செய்கிறது. மலட்டுத்தன்மை நீக்கி விந்து விருத்திக்குத் துணைபுரிகிறது. உண்ணும் உணவின் புரோட்டீன் சத்தை நமது வயிற்றில் சுரக்கும் பெப்ஸின் என்னும் கஸ்ட்ரிக்ஜ×ஸ் பெப்டோனாக மாற்றுகிறது. பெப்டோனை சிறுகுடலில் சுரக்கும் ஜ×ஸ் அமினோஅசிடாக மாற்றி, அமினோஅசிட் புரோட்டீனாக ரத்தத்துடன் கலக்கச் செய்கிறது. இந்த புரோட்டீன் சிந்தஸிஸ் செயல்முறைக்கு இதன் பழச்சாறு பெரிதும் துணைசெய்கிறது. ரத்தத்தில் குளுக்கோஸ் சத்துக் குறைவு ஏற்படாதவண்ணம் பாதுகாக்கிறது. கூல்பெரீஸ்: கூஸ்பெரீஸ் பழத்துண்டுகளை வெங்காயத் துண்டுகளுடன் வேக வைத்து சர்க்கரை சேர்த்து கூழாக்கி 100 கிராம் மீன் மற்றும் மாமிசக்கறி உணவுடன் சேர்த்துச் சாப்பிடலாம். இதன் மூலம் நமது உடலுக்கு 66 கலோரி வெப்பச்சக்தி கிடைக்கும். கண்பார்வை நன்றாகத் தெரிவதற்குப் பயன்படுகிறது. உடம்பில் உள்ள செல் அணுக்கள் மற்றும் ரடிக்கல் ஆகியவற்றைச் சமநிலைப்படுத்தி வலுப்படுத்துகிறது. உடலில் உள்ள செல் மெம்ரேனை சிதையாமல் பாதுகாக்கிறது. புற்றுநோய் வராமலும், ஏற்கனவே புற்றுநோயில் பாதிக்கப்பட்டவர்களுக்கு புற்றுநோய் செல்கள் மேலும் பெருகிப் பரவாமலும் தடுக்கிறது. உடம்பில்ë `டிïமர்' என்கிற புற்றுநோய்க்கட்டி ஏற்படாமல் பாதுகாக்கிறது. இருதயம் சம்பந்தமான கார்டியோவஸ்குலார் நோய்கள் வராமல் பாதுகாக்கிறது. என்றும் இளமையுடன் இருக்கச்செய்யும். பிணி மூப்பு வராமல் பாதுகாக்கும். உடல்வலி மற்றும் பிணி நிவாரணியான ஆஸ்ப்ரின் கலந்த சலிசைலிக் அசிட் குணம் மிகுந்தவை. பழத்திலுள்ள சாலிசைலிக் அசிட் நமது இருதயத்திலிருந்து ரத்தத்தினை உடம்பின் பிற பாகங்களுக்கு எடுத்துச் செல்லும் ரத்தத் தமனிகள் தடித்து விடாமல் பாதுகாக்கும் குணம் கொண்டது!

Related

பழங்களின் பயன்கள் 5458586275476111449

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item