ஃபாஸ்ட் ஃபுட் மேளா! மசாலா டிட்பிட்ஸ்
தேவையானவை: டயட் பிஸ்கட் - 10, ஊற வைத்த ராஜ்மா, புளிப்பில்லாத தயிர் - தலா அரை கப், துருவிய கோஸ், கேரட் - தலா கால் கப், துருவிய வெங்காயம் - ஒர...
https://pettagum.blogspot.com/2011/02/blog-post_1551.html
தேவையானவை: டயட் பிஸ்கட் - 10, ஊற வைத்த ராஜ்மா, புளிப்பில்லாத தயிர் - தலா அரை கப், துருவிய கோஸ், கேரட் - தலா கால் கப், துருவிய வெங்காயம் - ஒரு டேபிள்ஸ்பூன், விதை நீக்கி பெரிய துண்டுகளாக நறுக்கிய தக்காளி, பால் ஏடு (அ) ஃப்ரெஷ் கிரீம் - தலா 2 டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள் - ஒரு சிட்டிகை, நசுக்கிய பூண்டு - 2 பல், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: தயிரை துணியில் வடிகட்டி, தண்ணீர் வடிந்த பிறகு ஒரு கிண்ணத்தில்போட்டு, அதில் நசுக்கிய பூண்டு, மிளகுத்தூள், உப்பு, பால் ஏடு சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும். இதனுடன் பிஸ்கட் தவிர மற்ற எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து கொள்ளவும். இந்தக் கலவையை ஒரு
பிஸ்கட்டின் மேல் பரவ லாகத் தடவி, உடனே பரிமாறவும்.
Post a Comment