சமையல் குறிப்புகள் ! அடை
தேவையான பொருட்கள்: பச்சரிரிசி - நூறு கிராம் புழுங்கலரிசி - நூறு கிராம் பாசிப் பருப்பு - நூறு கிராம் கடலை பருப்பு- நூறு கிராம் சோம்பு - ...

https://pettagum.blogspot.com/2011/02/blog-post_4519.html
தேவையான பொருட்கள்:
பச்சரிரிசி - நூறு கிராம்
புழுங்கலரிசி - நூறு கிராம்
பாசிப் பருப்பு - நூறு கிராம்
கடலை பருப்பு- நூறு கிராம்
சோம்பு - ஒரு டேபிள் ஸ்பூன்
பெருங்காயம் - ஒரு தேக்கரண்டி
துவரம் பருப்பு- நூறு கிராம்
உளுந்து - நூறு கிராம்
வர மிளகாய் - 5
பூண்டு - இரண்டு பல்
தேங்காய் துருவல் - இரண்டு டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
சின்ன வெங்காயம் - இருநூறு கிராம்
செய்முறை:
முதலில் அரிசி வகைகளையும், பருப்பு வகைகளையும் ஒன்றாக அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். தனியாக ஒரு கிண்ணத்தில் வரமிளகாய், சோம்பு இரண்டையும் ஊற வைக்க வேண்டும். சின்ன வெங்காயத்தை மிக நைசாக நறுக்க வேண்டும். அரிசி, பருப்பு கலவை நன்கு ஊறியதும் நன்றாக கழுவி உப்பு, ஊற வைத்த மிளகாய், சோம்பு, பூண்டுப் பல் சேர்த்து கிரைண்டரில் போட்டு ஐந்து நிமிடம் அரைக்க வேண்டும்.
Post a Comment