சமையல் குறிப்புகள் ! கோழி மிளகு குழம்பு
தேவையான பொருட்கள் புளி - 20 கிராம் சிக்கன் - 250 கிராம் வெங்காயம் - 100 கிராம் தக்காளி - 50 கிராம் பட்டை - 5 கிராம் இலவங்கம் - 3 கிராம் பூண...
https://pettagum.blogspot.com/2011/02/blog-post_3118.html
தேவையான பொருட்கள்
புளி - 20 கிராம்
சிக்கன் - 250 கிராம்
வெங்காயம் - 100 கிராம்
தக்காளி - 50 கிராம்
பட்டை - 5 கிராம்
இலவங்கம் - 3 கிராம்
பூண்டு - 25 கிராம்
இஞ்சி - 25 கிராம்
மிளகாய்த் தூள் - 10 கிராம்
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
தனியாத் தூள் - 15 கிராம்
புதிய கறிவேப்பிலை - 1/2 கட்டு
மிளகுப் பொடி - 20 கி
பால் - 50 மில்லி
எண்ணை - 50 மில்லி
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை
* எண்ணையை சூடு செய்து கறி மசாலாக்களை சேர்க்கவும், அத்துடன் கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம் போட்டு பொன்நிறமாக வறுக்கவும்.
* பிறகு இஞ்சி, பூண்டு விழுது சேர்க்கவும்.
* மிளகாய், மஞ்சள், தனியா பவுடரை சேர்த்து நன்றாக கிளறி, நீரை தெளிக்கவும். பின்னர் தக்காளியை சேர்த்துக் கிளறவும்.
* இப்போது சிக்கன் மற்றும் மிளகுத்தூள் சேர்க்கவும். சிக்கனை நன்றாக வேகவிட்டு பால் சேர்க்கவும்.
* சுவையை சரி பார்க்கவும், வறுத்த கறிவேப்பிலை சேர்த்து அலங்கரிக்கவும்.
* சாதத்துடன் பரிமாறவும்.
குறிப்பு
சிறந்த சுவை பெற புதிதாக தயாரித்த மிளகு பொடியை சேர்க்கவும்.
Post a Comment