ஃபாஸ்ட் ஃபுட் மேளா! சட்னி மசால்தோசை
தேவையானவை: தோசை மாவு - 2 கப். மசாலாவுக்கு; வேக வைத்து உதிர்த்த உருளைக்கிழங்கு - 2, பொடியாக நறுக்கிய வெங்காயம் - அரை கப், பொடியாக நறுக்கிய பச...
https://pettagum.blogspot.com/2011/02/blog-post_679.html
தேவையானவை: தோசை மாவு - 2 கப். மசாலாவுக்கு; வேக வைத்து உதிர்த்த உருளைக்கிழங்கு - 2, பொடியாக நறுக்கிய வெங்காயம் - அரை கப், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2, மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, உப்பு - தேவையான அளவு, எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு. தாளிக்க; கடுகு, சீரகம், உளுந்து - தலா அரை டீஸ்பூன். சட்னிக்கு; முழு உளுந்து 2 டேபிள்ஸ்பூன், எள் - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 5, பெருங்காயம் - ஒரு சிறு துண்டு, தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், புளி - ஒரு கொட்டைப்பாக்களவு, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன்.
செய்முறை: கடாயைக் காய வைத்து, அதில் எள்ளைப் போட்டு, வறுத்தெடுக்கவும். கடாயில் எண்ணெயை விட்டு, பெருங்காயத்தைப் போடவும். பொரிந்ததும் உளுந்து, மிளகாய் சேர்த்து நிறம் மாறும் வரை வறுக்கவும். இத்துடன் தேங்காய் துருவலை சேர்த்து நன்றாக வறுத்துக் கொள்ளவும். புளி, உப்பு சேர்த்து, எல்லாவற்றையும் ஒன்றாக சிறிது தண்ணீர் விட்டு விழுதாக அரைத்தெடுக்கவும். சட்னி ரெடி!
கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, சீரகம், உளுந்து தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்க்கவும். இத்துடன் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி, மிளகாய்தூள் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, அதில் உருளைக்கிழங்கு, எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்க்கவும். பொடியாக நறுக்கிய கொத்தமல்லியைத் தூவி, கிளறி இறக்கவும். மசாலா ரெடி!
தோசைக்கல்லை காய வைத்து மெல்லிய தோசையாக வார்த்து, வெந்ததும், அதன் மேல் சட்னியைத் தடவி, உருளை மசாலாவை நடுவில் வைத்து சுற்றிலும் எண்ணெய் (அ) நெய் விட்டு மடித்தெடுக்கவும்.
Post a Comment