சமையல் குறிப்புகள் ! முள்ளங்கி சப்பாத்தி

நாம் அன்றாடம் உணவில் சேர்க்கும் காய்கறிகளும், மற்ற பொருட்களும் உணவுக்கு சுவை ஊட்டுவது மட்டுமின்றி நம் வாழ்வை ஆரோக்கியம் மிகுந்ததாகவும் மாற்ற...

நாம் அன்றாடம் உணவில் சேர்க்கும் காய்கறிகளும், மற்ற பொருட்களும் உணவுக்கு சுவை ஊட்டுவது மட்டுமின்றி நம் வாழ்வை ஆரோக்கியம் மிகுந்ததாகவும் மாற்றுகின்றன. அவ்வகையில் முள்ளங்கி சேர்த்துச் செய்யும் சத்தான சப்பாத்தி பற்றி பார்க்கலாம். முள்ளங்கியின் முக்கியத்துவம் முள்ளங்கி சப்பாத்தி செய்யும் முன் முள்ளங்கியின் முக்கியத்துவத்தை பார்த்து விடுவோமா? உடல் பருமனாக உள்ளவர்கள் அன்றாடம் முள்ளங்கி உட்கொள்வதை வழக்கமாகக் கொண்டால் அவர்கள் உடல் பருமன் குறைய வாய்ப்புண்டு. ஏனெனில் கெட்ட கொழுப்பை கரைத்து வெளியே தள்ளும் சக்தி வாய்ந்தது முள்ளங்கி. உடலில் சேர்ந்துள்ள கெட்ட நீரை வெளியேற்றுவதிலும் முள்ளங்கி முக்கியப்பங்கு வகிக்கிறது. முள்ளங்கியில் பொதிந்து கிடக்கும் `வைட்டமின் சி', ஆஸ்துமா தொல்லையைக் குறைத்து சைனஸ் பிரச்சினை உள்ளோருக்கு பெரும் நிவாரணத்தை அளிக்க வல்லது. முள்ளங்கியில் உள்ள `வைட்டமின் கே' சத்து சிறுநீரகத்தில் உள்ள கற்களை கரைத்து அவை சேர விடாமலும் தடுக்கும் சக்தி வாய்ந்தது. மேலும் ரத்த அழுத்தத்தையும் கட்டுப்பாட்டில் வைக்கும். முள்ளங்கியில் இத்துணை நன்மைகள் இருந்தாலும் சிலருக்கு அதன் வாசனை பிடிப்பதில்லை. முள்ளங்கியை சாம்பார் செய்கையில் மற்ற பொருட்களுடன் சேர்ப்பதால் அதன் வாசனை அவ்வளவு விரும்பத்தகாததாக இருப்பதில்லை. முள்ளங்கி சப்பாத்தி செய்கையில் ஓமம் உபயோகப்படுத்தினால் முள்ளங்கி வாசனை அவ்வளவாக தெரியாமல் இருப்பதுடன் ஓமத்தின் நன்மைகளும் நமக்கு கிடைக்கும். நம் வயிறாருக்கு ஆத்மார்த்த தோழனாக செயல்படுவது ஓமம் என்றால் மிகையில்லை. மிகச்சிறிய குழந்தையிலிருந்து வயது முதிர்ந்த பெரியோர் வரை அனைவரின் வயிற்றுக்கும் வயது வித்தியாசமின்றி நன்மை நல்குவது ஓமம். ஓமத்தை ஒரு துணியில் கட்டி, அதை முகர்ந்தாலே மூக்கடைப்பு, ஜலதோஷம் முதலியவை நீங்கும். படுக்கும் தலையணையின் கீழ் சிறிய ஓம பொட்டலம் ஒன்றை வைத்து படுக்கும் பழக்கமும் பழங்காலத்தில் இருந்திருக்கிறது. வாசத்திலேயே இவ்வளவு நன்மை பயக்கும் ஓமம் உடலுக்கு உள்ளே சென்றால் இன்னும் பலப்பல நன்மைகளைத் தரும். வாயுத்தொல்லை, பசியின்மை, செரிமானமின்மை போன்ற அனைத்துத் தொல்லைகளுக்கும் நிவாரணம் அளிக்கும். ஓமத்தை வீட்டு மருந்தாகவே பயன்படுத்தி வந்தனர் நம் முன்னோர். மனம் ஒத்த தம்பதியர் இணைந்து குடும்பம் நடத்துகையில் விளையும் நன்மைகள் பல என்பதுபோல் முள்ளங்கி + ஓமம் சேர்ந்து கிடைத்தால் நம் உடலும் பலப்பல நன்மைகளைப் பெறும். இனி முள்ளங்கி சப்பாத்தி செய்யக் கற்றுக்கொள்ளலாம். முள்ளங்கி சப்பாத்தி தேவையான பொருட்கள் முள்ளங்கி - 2 கோதுமை மாவு - 1 கப் சிவப்பு மிளகாய்த்தூள்- 1 டீஸ்பூன் ஓமம் - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் தனியாத் தூள் - 1/2 டீஸ்பூன் எண்ணை - 8 டேபிள் ஸ்பூன் உப்பு - 1/2 டீஸ்பூன். செய்முறை முள்ளங்கியை நன்கு கழுவி பூத்துருவலாக துருவிக் கொள்ளவும். வாணலியில் சிறிது எண்ணை ஊற்றி காய்ந்த மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், தனியாத் தூள், ஓமம் சேர்த்து சிறிது பச்சை வாசனை போக வதக்கி கோதுமை மாவுடன் சேர்க்கவும். துருவிய முள்ளங்கி, உப்பு சேர்த்து மாவை நன்கு கலந்து தேவையானால் சிறிது தண்ணீர் சேர்த்து (முள்ளங்கித் துருவலிலேயே தண்ணீர் இருக்குமாதலால் தேவையானால் மட்டுமே தண்ணீர் சேர்க்கவும்) சப்பாத்தி மாவு பதத்திற்குப் பிசையவும். பிசைந்த மாவை சிறு உருண்டைகளாக்கி சப்பாத்தியாகத் தட்டி, ஒரு தோசைக் கல் அல்லது நான்ஸ்டிக் தவாவில் போட்டு இரு பக்கமும் எண்ணை ஊற்றி திருப்பிவிட்டு எடுத்து பரிமாறவும். சுவைக்கான குறிப்பு சப்பாத்தியின் சுவை மற்றும் ஆரோக்கிய சுவையை அதிகரிக்க கேரட் துருவலையும், முள்ளங்கித் துருவலுடன் சேர்க்கலாம். முள்ளங்கியையும் ஓமத்தையும் இணைத்து சப்பாத்தி செய்து உடலாருக்கு வழங்குவதானது சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த சமையல் தானே!

Related

சமையல் குறிப்புகள் 6335831472901225017

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item