ஃபாஸ்ட் ஃபுட் மேளா! வெஜிடபிள்-கீரை பீட்சா
தேவையானவை: பீட்சா பன் - 4, பொடியாக நறுக்கிய பசலைக் கீரை - ஒரு கப், பொடியாக நறுக்கிய குடமிளகாய், துருவிய சீஸ் - அரை கப், பிஞ்சு சோளமுத்துக்கள...
https://pettagum.blogspot.com/2011/02/blog-post_7702.html
தேவையானவை: பீட்சா பன் - 4, பொடியாக நறுக்கிய பசலைக் கீரை - ஒரு கப், பொடியாக நறுக்கிய குடமிளகாய், துருவிய சீஸ் - அரை கப், பிஞ்சு சோளமுத்துக்கள், பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி விழுது - தலா கால் கப், மிளகாய்த்தூள், சர்க்கரை - தலா அரை டீஸ்பூன், பொடியாக நறுக்கிய பூண்டு - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: எண்ணெயைக் காய வைத்து, நறுக்கிய பூண்டு சேர்த்து, பொரிந்ததும் வெங்கா யத்தை சேர்க்கவும். வெங்காயம் சிறிது வதங்கிய தும், குடமிளகாய், கீரை சேர்த்து மேலும் சிறிது நேரம் வதக்கவும். பிறகு தக்காளி விழுது, மிளகாய்த்தூள், உப்பு, சர்க்கரை, வேக வைத்த சோளம் சேர்த்து குறைந்த தீயில் 5 நிமிடம் நன்கு கொதிக்க விடவும்.
இதனை, பீட்சா பன் மேல் பரவலாக வைத்து, துருவிய சீஸை தூவவும். தீயை நன்கு குறைத்து தோசைக் கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், பீட்சா பன்னை வைத்து ஒரு மூடியால் மூடவும். பன் சூடாகி, சீஸ் உருகியதும் எடுத்து சூடாகப் பரிமாறவும்.
Post a Comment