வாசகிகள் கைமணம்! தூள் சுவையில் துளசி அடை! துளசி அடை தேவையானவை: புழுங்கல் அரிசி & ஒரு கப், பச்சரிசி & முக்கால் கப், சீரகத்தூள் ...
வாசகிகள் கைமணம்!
தூள் சுவையில் துளசி அடை!
துளசி அடை
தேவையானவை: புழுங்கல் அரிசி & ஒரு கப், பச்சரிசி & முக்கால் கப், சீரகத்தூள் & ஒரு டீஸ்பூன், துளசி & 2 கப், எண்ணெய், உப்பு & தேவையான அளவு.
செய்முறை: புழுங்கல் அரிசி, பச்சரிசி இரண்டையும் ஊற வைத்து நைஸாக அரைக்கவும். துளசியை சுத்தம் செய்து அலசி தனியாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த மாவுடன் துளசி விழுது, சீரகத்தூள், உப்பு சேர்த்து பிசையவும். பிசைந்த மாவை தோசைக்கல்லில் அடைகளாகத் தட்டவும். இருபுறமும் திருப்பிப் போட்டு வெந்ததும் எடுக்கவும். துளசி சேர்ந்திருப்பதால் உடலுக்கும் நல்லது. ருசியாகவும் இருக்கும்.
துளசி அடை: துளசியுடன் 5 கற்பூரவல்லி இலைகளைப் போட்டு அரைத்து செய்தால் சளித்தொல்லை நீங்குவதுடன் அடையும் மணமாக இருக்கும்.
----------------------------------------------------------------------------------------------
பிரெட் கீர்
தேவையானவை: பிரெட் துண்டுகள் & 10, பால் & 4 கப், சர்க்கரை & 2 கப், நெய் & அரை கப், முந்திரி, திராட்சை, ஏலக்காய்த்தூள் & தேவைக்கேற்ப.
செய்முறை: பிரெட்டை சிறு துண்டுகளாக்கவும். கடாயில் நெய் ஊற்றி பிரெட் துண்டுகளை பொன்னிறமாக வறுக்கவும். பாலை சுண்டக் காய்ச்சி, வறுத்த பிரெட் துண்டுகளைச் சேர்க்கவும். அதில் முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்துப் போட்டு, ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கவும். இதை சூடாகவோ அல்லது ஃபிரிட்ஜில் வைத்து ‘ஜில்’லென்று குளிர்ச்சியாகவோ குடிக்கலாம்.
பிரெட் கீர்: இதில் சிறிது பால் ஏட்டுடன் குங்குமப்பூ ஒரு சிட்டிகை கலந்து பரிமாறினால் பாஸந்தி போல பிரமாதமாக இருக்கும்.
-----------------------------------------------------------------------------------
கோதுமை வடை
தேவையானவை: கோதுமை ரவை & ஒரு கப், பொட்டுக்கடலை மாவு, அரிசி மாவு, ரவை & தலா அரை கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் & ஒரு டேபிள்ஸ்பூன், பச்சைமிளகாய் & 2, இஞ்சி, உப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை & சிறிதளவு, எண்ணெய் & தேவையான அளவு.
செய்முறை: கோதுமை ரவை மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு மிக்ஸியில் கரகரப்பாக அரைக்கவும். இதனுடன் ரவை, அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு சேர்த்து கலக்கவும். வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக பிசையவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் மாவை வாழை இலையில் வைத்து சின்ன வடைகளாகத் தட்டிப் போடவும். இருபுறம் திருப்பிப் போட்டு மொறுமொறுவென பொரித்தெடுக்கவும்.
கோதுமை வடை: சிறிது பீன்ஸ், கேரட், பீட்ரூட் ஆகியவற்றைத் துருவிப் போட்டு செய்தால் சுவை கூடும். வடை தட்டும் போது ஊறவைத்த கடலைப்பருப்பு ஒரு டீஸ்பூன் சேர்த்து செய்தால் மொறுமொறுப்பு அதிகமாகும்.
----------------------------------------------------------------------------------------
Post a Comment