ஜிஞ்சர் ஸ்மூத்திஸ்-உடம்பு சூட்டைத் தணிக்கும் டிரிங்க் இது
ஸ்மூத்திஸ் உடம்புக்கு ஏற்ற டிரிங்க் இது. உடம்பு சூட்டைத் தணிக்கும் சக்தி இதற்கு உண்டு. இதை சீக்கிரமாகத் தயார் செய்யலாம். இதில் உள்ள விட...
https://pettagum.blogspot.com/2011/02/blog-post_3379.html
ஸ்மூத்திஸ்
உடம்புக்கு ஏற்ற டிரிங்க் இது. உடம்பு சூட்டைத் தணிக்கும் சக்தி இதற்கு உண்டு.
இதை சீக்கிரமாகத் தயார் செய்யலாம்.
இதில் உள்ள விட்டமின் கன்டென்ட்டை அதிகரிக்க முளைகட்டிய கோதுமை, ஓட்ஸ் குறைந்த கொழுப்பு, பால், தயிர், சோயா பால் (அ) ஐஸ்க்ரீம் முதலியவற்றைச் சேர்க்கலாம்.
இதைத் திக்காக தயார் செய்வதற்கு பழங்களை உதிர்த்து ஃப்ரீசரில் வைக்கலாம். பழத்தை ப்ரீஸ் செய்ய முடியாவிட்டால் சிறிதளவு ஐஸ் கட்டியை இதனுடன் சேர்த்துக் கொள்ளலாம்.
பனானா பெர்ரி ஸ்மூத்திஸ்
தேவையான பொருட்கள் : வாழைப்பழம் -1, தயிர் -1½ டீ கப், வெனிலா எசென்ஸ் -½ டீஸ்பூன், ஸ்ட்ரா பெர்ரி -1 டீ கப், ஆரஞ்சு ஜூஸ் - 1 மேஜைக்கரண்டி
செய்முறை : எல்லாப் பொருட்களையும் மிக்ஸியில் போட்டு ஸ்மூத்தாக அடித்துச் சாப்பிடவும்.
ஜிஞ்சர் ஸ்மூத்திஸ்
தேவையான பொருட்கள் : ஆரஞ்சு ஜூஸ், பைன்ஆப்பிள் ஜூஸ் - தலா ½ டீ கப், வாழைப்பழம் - பாதி துருவிய இஞ்சி - ¼ டீ கப், ஐஸ் - 2 கட்டி.
செய்முறை : எல்லாப் பொருட்களையும் மிக்ஸியில் போட்டு ஸ்மூத்தாக பீட் செய்யவும். சில்லென்று குடிக்கவும்.
மால்டெட் டேட்ஸ் ஸ்மூத்திஸ்
தேவையான பொருட்கள் : பேரீச்சம்பழம், கொழுப்பு நீங்கிய பால் - தலா ½ டீ கப், மால்டம் சேர்த்த ஏதாவது ஒரு ஹெல்த் டிரிங்க்ஸ் பவுடராக -3 மேஜைக்கரண்டி, தயிர் - 2 டீ கப், வென்னிலா எசென்ஸ் - 1 மேஜைக்கரண்டி.
செய்முறை : அனைத்தையும் மிக்ஸியில் சேர்த்து ஸ்மூத்தாக்கவும்.
சாக்லெட் பனானா ஸ்மூத்திஸ்
தேவையான பொருட்கள் : கொழுப்பு நீக்கிய பால் - 1 டீ கப், பழுத்த வாழைப்பழம் - 1, பொடித்த சர்க்கரை - தேவையான அளவு, கோக்கோ பவுடர் - 1 மேஜைக்கரண்டி, வென்னிலா எசென்ஸ் - ½ மேஜைக்கரண்டி.
செய்முறை : அனைத்தையும் மிக்ஸியில் அடித்து ஸ்மூத்தாக்கி, சில்லென்று பரிமாறவும்.
Post a Comment