சமையல் குறிப்புகள்! கலவை சட்னி
தேவையான பொருட்கள் கடலைப் பருப்பு - 4 ஸ்பூன் வரமிளகாய் - 3 சின்ன வெங்காயம் - 10 பூண்டு - 2 தக்காளி - 1 கறிவேப்பிலை - 1 கொத்து மல்லி இலை - 1 ...
https://pettagum.blogspot.com/2011/02/blog-post_11.html
தேவையான பொருட்கள்
கடலைப் பருப்பு - 4 ஸ்பூன்
வரமிளகாய் - 3
சின்ன வெங்காயம் - 10
பூண்டு - 2
தக்காளி - 1
கறிவேப்பிலை - 1 கொத்து
மல்லி இலை - 1 கைப்பிடி அளவு
புளி - ஒரு சிறிய கோலிக் குண்டின் அளவு
தேங்காய் - 1/2 கப்
உப்பு - 1 ஸ்பூன்
எண்ணை - 2 ஸ்பூன்
செய்முறை
முதலில் எண்ணையை காயவைத்து கடலைப் பருப்பை போட்டு சிவக்க வறுத்ததும் வரிசையாக வரமிளகாய்,சின்ன வெங்காயம்,பூண்டு,தக்காளி போட்டு வதங்கியதும் தீயைக் குறைத்து விட்டு புளி,தேங்காய் துருவல்,மல்லி இலை,கறிவேப்பிலை,உப்பு ஆகியவற்றை சேர்த்து ஒரு கிளறு கிளறி தீயை அனைத்து விடவும்.
பிறகு மேற்கண்ட எல்லாவற்றையும் மிக்சியில் இட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்
சுவையான சட்னி இட்லி ,தோசைக்கு தொட்டுக் கொள்ள அருமையாக இருக்கும்.
Post a Comment