வாசகிகள் கைமணம்! ஈஸி நட்ஸ் ஐஸ்கிரீம்
தேவையானவை: கொதிக்கும் பால், பால் பவுடர் - தலா ஒரு கப், சோள மாவு - ஒரு டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், முந்திரி, பாதாம் - தலா 4. வெண...
https://pettagum.blogspot.com/2011/02/blog-post_9740.html
தேவையானவை: கொதிக்கும் பால், பால் பவுடர் - தலா ஒரு கப், சோள மாவு - ஒரு டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், முந்திரி, பாதாம் - தலா 4. வெண்ணெய் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை: பால் பவுடரை ஒரு பாத்திரத்தில் கொட்டி, அதனுடன் ஏலக்காய்த்தூளை சேர்க்கவும். இதில் கொதிக்கும் பாலை விட்டு ஒரு முள் கரண்டியால் கலக்கினால் பால் பவுடர் பாலில் கரைந்துவிடும். அதனுடன் வெண் ணெய் மற்றும் சோள மாவு சேர்த்துக் கலக்கி, அகலமான ஒரு பாத்திரத்தில் கொட்டி ஆற விடவும். அதே பாத்திரத்தை அரை மணி நேரம் ஃபிரீஸரில் வைக்கவும். பாதி கெட்டியான நிலை யில் எடுத்து, மிக்ஸியில் இரண்டு சுற்று சுற்ற வும். வெறும் கடாயில் முந்திரி, பாதாம் துண்டு களை வறுத்து, அரைத்த கிரீமுடன் சேர்த்து சிறு கிண்ணங்களில் ஊற்றி மீண்டும் ஃபிரீஸரில் வைத் தால், சில மணி நேரங்களில் நட்ஸ் ஐஸ்கிரீம் ரெடி!
ஈஸி நட்ஸ் ஐஸ்கிரீம்: மிக்ஸியில் சுற்றும்போது கோகோ பவுடர் (அ) போர்ன்விடா (அ) பூஸ்ட் சேர்த்து செய்தால், சாக்லேட் ஐஸ்கிரீம் போல் அருமையாக இருக்கும்.
Post a Comment