மாங்காய் ரெசிபிகள்! மாங்காய் சித்ரான்னம்-- திடீர் மாங்காய் ஊறுகாய்

மாங்காய் மோர்க் கூட்டு தேவையான பொருட்கள்: இனிப்புள்ள மாங்காய் (கிளி மூக்கு மாங்காய்) - 1, காரட் பெரியது - 1, பீன்ஸ்- 50 கிராம். உருளைக் க...

மாங்காய் மோர்க் கூட்டு தேவையான பொருட்கள்: இனிப்புள்ள மாங்காய் (கிளி மூக்கு மாங்காய்) - 1, காரட் பெரியது - 1, பீன்ஸ்- 50 கிராம். உருளைக் கிழங்கு (பெரியது) - 1, தேங்காய் - ஒரு மூடி, பச்சை மிளகாய் - 6, சீரகம் - ஒரு டீஸ்பூன், கெட்டித் தயிர் - ஒரு கப், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - தாளிக்க, கொத்தமல்லி, கறிவேப்பிலை - கொஞ்சம். செய்முறை : தேங்காயைத் துருவி சீரகம், பச்சைமிளகாயுடன் விழுதாக அரைத்துக் கொள்ளவும். மாங்காய், காய்கறிகளை பொடியாக நறுக்கி வைக்கவும், கெட்டியான வாணலியை அடுப்பில் வைத்து, சிறிது எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், கடுகு, சிரகம், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு தலா 1 டீஸ்பூன் போட்டு கொஞ்சம் பெருங்காயத் தூள் போட்டுத் தாளித்து எடுத்து வைத்துக் கொண்டு; அதே வாணலியில் காய்கறிகளைப் போட்டு நன்கு வதக்க வேண்டும். காய்கறிகளைப் பொடியாக நறுக்குவதால் சீக்கிரம் வெந்து விடும். கலரும் மாறாது. காய்கறிகள் வெந்த பிறகு அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதைப் போட்டு நன்கு கெட்டியான தயிரை உடன் ஊற்றி, உப்பைப் போட்டு இறக்கி விடவும். ஏற்கெனவே தாளித்து வைத்ததை எடுத்துப் போட்டு, கொத்தமல்லி, கறிவேப்பிலையை அதனுடன் போட்டு மேலே ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றிக் கலந்து பரிமாறவும். கமகம வாசனையுடன் சுவையாய் இருக்கும் இந்த மோர்க் கூட்டு. மாங்காய் சித்ரான்னம் தேவையான பொருட்கள்: இனிப்புள்ள மாங்காய் (பெரியது) - 1, காரட் துருவல், தேங்காய்த் துருவல் - தலா 1 கப், வற்றல் மிளகாய் -8, பாஸ்மதி அரிசி - 2 கப், கடுகு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, சீரகம் - தலா 1 டீஸ்பூன், பெருங்காயத்தூள், மஞ்சள் தூள் - தலா ¼ டீஸ்பூன், கறிவேப்பிலை, புதினா, மல்லி இலைகளை நன்கு அலம்பி பொடியாக நறுக்கியது - ஊறுகாய் விருப்பத்திற்கேற்ப வைக்கவும், உப்பு - தேவையான அளவு. செய்முறை : பாஸ்மதி அரிசியை உதிர் உதிராக சாதம் வடித்துக் கொள்ளவும், சாதத்தின் மேல் 2 டீஸ்பூன் நெய் அல்லது தேங்காய் எண்ணெய் பரவலாக ஊற்றி வைக்கவும். சாதம் இன்னும் வாசனையாக இருக்கும். வாணலியை அடுப்பில் வைத்து கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, சீரகம், பெருங்காயம், வற மிளகாய், மஞ்சள்ப் போட்டு வறுபட்டவுடன், மாங்காயைத் துருவி சேர்க்கவும். பின் தேங்காயைச் சேர்க்கவும். பின்பு துருவிய காரெட்டைச் சேர்த்து, தேவையான உப்பு போட்டு நன்கு கலக்கவும். பின்பு வடித்து வைத்துள்ள சாதத்தைப் போட்டு சாதம் உடையாமல் நன்கு கிளறவும். கடைசியில் நறுக்கி வைத்துள்ள கறிவேப்பிலை, புதினா, மல்லி இலைகளை மேலே தூவி அலங்கரித்து பரிமாறவும். இது மிகவும் சுவையாக இருக்கும். பிரயாணம் செல்பவர்கள் எடுத்துச் செல்லலாம். செய்வதும் எளிது. திடீர் மாங்காய் ஊறுகாய் இந்த மாங்காய் ஊறுகாயை 5 நிமிடத்தில் செய்து விடலாம். இந்த ஊறுகாய் செய்ய புளிப்பில்லாத மாங்காய் இருந்தால் நன்றாக இருக்கும். இரண்டு மாங்காயைப் பொடிப் பொடியாக நறுக்கி உப்புப் போட்டு பிசறி வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு வெடித்த பின், மஞ்சள் தூள் ஒரு டீஸ்பூன் சேர்த்து, மிளகாய்த் தூள் நான்கு டீஸ்பூன் போட்டுப் பொரிய விட்டு பொருங்காயத்தூள் ஒரு டீஸ்பூன் போட்டு நறுக்கிய மாங்காயைப் போட்டு ஒரு புரட்டு புரட்டவும் தண்ணீர் படாமல் இருந்தால் பத்து நாட்கள் வரை தாங்கும் ஊறுகாய் இது. கோடை விடுமுறைக்கு டூர் செல்பவர்கள், இது மாதிரி போட்டு எடுத்துச் செல்லலாம். மாங்காய் பச்சடி தேவையான பொருட்கள்: இனிப்புள்ள மாங்காய் - 2, வெல்லம் - 2 கப், பச்சை மிளகாய் - 4, கடுகு, வெந்தயம், உளுத்தம்பருப்பு, கடலைப் பருப்பு, மஞ்சள் தூள், பெருங்காயத் தூள் - தலா ¼ டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை : மாங்காயை தோல் சீவி சிறிய துண்டங்களாக்கவும் குக்கரில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் நறுக்கி வைத்துள்ள மாங்காய்த் துண்டங்களைப் போட்டு ஒரு விசில் வந்ததும் இறக்கி வைத்து விடவும். பின்பு வாணலியை அடுப்பில் வைத்து கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, வெந்தயம், மிளகாய், பெருங்காயத்தூள், மஞ்சள் தூள் போட்டு வதக்கி அதனுடன் வெல்லத்தையும் போட்டு, மசித்த மாங்காயையும் போட்டு தேவையான உப்புப் போட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கி, கறிவேப்பிலை கொத்தமல்லி தாளிக்கவும், குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான பச்சடி இது!

Related

வாசகிகள் கைமணம்! பெங்களூர் மசாலா தோசை--மிளகு தேங்காய்ப் பால்-- பெங்காலி கொத்சு

தேவையானவை: புழுங்கல் அரிசி - 2 கப், பச்சரிசி, துவரம்பருப்பு - தலா ஒரு கப், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - அரை கப், உருளைக்கிழங்கு - கால் கிலோ, கடுகு, பட்டை, கிராம்பு, சோம்பு, கறிவேப்பில...

சமையல் குறிப்புகள் ! கீரைதோசை, கீரைசூப், கீரை புலாவ், கீரை இட்லி, கீரை பூரி,

ஹாய் இல்லத்தரசி'ஸ்... கீரை சாப்பிடுறது எந்த அளவுக்கு உடம்புக்கு யூஸ்ஃபுல்லானதுன்னு எல்லாருக்கும் தெரியும். ஆனால் `கீரை சாப்பிடுப்பா'ன்னு சொன்னதும் உங்க குழந்தைங்க `உவ்வே' சொல்லிட்டு ஓடுறாங்களா? இதோ.....

சமையல் குறிப்புகள் ! நெல்லிக்காய் ரெஸிபிகள்

இதோ, நெல்லிக்காய் சீஸன் வந்துவிட்டது. விதவிதமாய் நெல்லிக்காய் ரெஸிபிகள் செய்து அசத்துங்களேன்!. நெல்லிக்காய் சொதி தேவையான பொருட்கள் : நெல்லிக்காய் - 1 கப், தேங்காய் - 1 மூடி, பச்சைமிளகாய் - 7, பெரிய...

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

Wednesday - Nov 27, 2024 5:27:57 PM

No. of Posts

8665 Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

16,087,352

Advertisement

Contributors

Popular PostsBlog Archive

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item