ஃபாஸ்ட் ஃபுட் மேளா! இட்லி பர்கர்
தேவையானவை: வேக வைத்த இட்லிகள் - 6, பொரித்தெடுத்த கட்லெட் - 6, லெட்யூஸ் இலை - 4, வட்டமாக நறுக்கிய வெங்காயம் - 6. சிவப்பு சட்னி செய்ய: காய்ந்...
https://pettagum.blogspot.com/2011/02/blog-post_7626.html
தேவையானவை: வேக வைத்த இட்லிகள் - 6, பொரித்தெடுத்த கட்லெட் - 6, லெட்யூஸ் இலை - 4, வட்டமாக நறுக்கிய வெங்காயம் - 6.
சிவப்பு சட்னி செய்ய: காய்ந்த மிளகாய் - 6, பூண்டு - 10 பல், தக்காளி - பாதி, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன்.
செய்முறை: கடாயில் எண்ணெயைக் காய வைத்து காய்ந்த மிளகாய், பூண்டு, தக்காளியை தனித் தனியே வதக்கிக் கொள்ளவும். ஆற வைத்து எல்லாவற்றையும் ஒன்றாக அரைத்துக் கொள்ளவும். சிவப்பு சட்னி ரெடி.
இட்லியை இரண்டு வட்ட துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு துண்டின் மேல் சட்னியைத் தடவி, அதன் மேல் லெட்யூஸ் இலைகளை வைத்து, அதன்மேல் கட்லெட்டை வைத்து, வட்டமாக நறுக்கிய வெங்காயத்தை வைத்து மற்றொரு இட்லித் துண்டால் மூடி பரிமாறவும்.
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் டிஷ் இது!
Post a Comment