தாய்ப்பால் அதிகரிக்க--குழந்தைக்குத் தொண்டை சளி குறைய--நல்ல பசியும் ஜீரணமும் ஏற்பட

என்னுடைய இரண்டு மாதக் குழந்தை சளி பிடித்து மிகவும் கஷ்டப்படுகிறான். தொண்டையில் கபம் கட்டிக்கொள்வதால் பால் குடிக்க முடியாமல் கஷ்டப்படுகிறான்...

என்னுடைய இரண்டு மாதக் குழந்தை சளி பிடித்து மிகவும் கஷ்டப்படுகிறான். தொண்டையில் கபம் கட்டிக்கொள்வதால் பால் குடிக்க முடியாமல் கஷ்டப்படுகிறான். பாலைச் சங்கில் எடுத்துக் கொடுத்தேன். குடிக்க மறுக்கிறான். என் சாப்பாட்டின் அளவைக் குறைத்தேன். பாலின் அளவு கம்மியாகிவிட்டது. என்ன சாப்பிட்டால் பாலின் அளவு கூடும்? அவனுக்கு ராகி, கோதுமை ஊற வைத்து கூழாகக் கொடுக்கலாமா? குழந்தையைப் பொதுவாக மூன்று வகையில் பிரிக்கலாம். முதலாவது " இந்த வயதில் குழந்தை தாய்ப்பாலை மட்டுமே குடித்து வளரும். குழந்தைக்கு எந்த நோயும் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள அம்மா பத்திய உணவாகச் சாப்பிட வேண்டும். இந்த வயதில் குழந்தைக்கு ஏதேனும் நோய் ஏற்பட்டால் தாயாருக்கு மருந்து கொடுத்து, தாய்ப்பாலின் வழியாக குழந்தைக்கு மருந்து சேர குழந்தையின் நோய் தீருவதும் முறையாகும். உங்களுக்குத் தாய்ப்பால் குறைந்துவிட்டது. குழந்தைக்கு தொண்டையில் கபம் கட்டி பால் குடிக்க முடியவில்லை என்று குறிப்பிட்டுள்ளீர்கள். உங்களுக்குத் தாய்ப்பால் அதிகரிக்கவும் அதன் வழியாக குழந்தைக்குத் தொண்டை சளி குறையவும் உணவில் அடிக்கடி முருங்கைக்கீரையும் பச்சைப் பயறு சுண்டலும் சேர்க்கவும். இதனால் தாய்ப்பால் வேண்டிய மட்டும் குழந்தைக்குக் குறைவில்லாமல் கிடைக்கும். மேலும் ஒரு பல் பூண்டைக் கொஞ்சம் தண்ணீர் கலந்த பாலில் சேர்த்துக் காய்ச்சி பூண்டை எடுத்து விட்டு பாலை வெதுவெதுப்பாக நீங்கள் காலை இரவு உணவிற்கு ஒரு மணி நேரம் முன்பாகக் குடிக்க வேண்டும். வாரத்தில் இருமுறை இதுபோல குடித்தால் போதும். நீங்கள் பூண்டுப்பாலைக் குடித்த மறுநாள், தாய்ப்பாலைப் பருகிய குழந்தையின் வாயில் பூண்டின் மணம் வீசும். பூண்டினால் சுத்திகரிக்கப்பட்ட தாய்ப்பால் குழந்தைக்கு எளிதில் சீரணமாகக் கூடியதாகும். தொண்டை கபக்கட்டை நீக்கவும் செய்யும். இதற்குக் காரணம் பாலில் கொழுப்பின் அம்சம் குறைந்து எளிதில் செரிக்க உதவும். குழந்தைக்கு வயிற்றில் மப்பு, உப்புசம், புளிப்பு எதுவும் தட்டாது. மலச்சிக்கல் இருக்காது. நல்ல பசியும் ஜீரணமும் ஏற்படும். மேலும் வசம்பின் மேல் தோலைச் சீவி, சட்டியிலிட்டுச் சுட்டு சாம்பலாக்கிப் பொடி செய்யவும். ஓர் அரிசி அளவு இந்தப் பொடியை எடுத்து, சிறிது தேனிலோ, தாய்ப்பாலிலோ தினந்தோறும் அல்லது இரண்டு அல்லது மூன்று தினத்திற்கு ஒரு முறையோ குழந்தைக்குக் கொடுக்கவும். சளி ஜலதோஷம் போன்ற நுரையீரல் நோயோ -வயிறு மப்பு, மந்தம், புளிப்பு, ஜீரணக்கோளாறு, உப்புசம், வாந்தி போன்றவையோ வராமல் தடுக்கும். மலச்சிக்கல் இல்லாமலும் இருக்கும். நீங்கள் குறிப்பிடும் ராகி, கோதுமைக் கூழ் போன்றவை குழந்தைக்கு ஆறு அல்லது ஏழு மாதம் ஆகும்போதுதான் கொடுப்பது நல்லது. கொஞ்சம் உணவைச் சாப்பிட்டு, தாய்ப்பாலையும் நம்பி இருக்கும் இந்த ராகி, கோதுமையைக் காட்டிலும் அரிசியைச் சமைத்துக் கொடுப்பது நலம். சுத்தமான அரிசியை ஓர் ஆவி கொதிக்க விட்டுச் சிறிது வெந்ததும் எடுத்து வெய்யிலில் உலர்த்தி அந்த அரிசியை ரவை கணக்கில் ஒரே சீராகப் பொடித்து, ஒரு சிட்டிகை ஜீரகமோ அல்லது ஓமமோ கூட்டிப் பொடி செய்ய வேண்டும். ஒரே ஒரு மிளகையும் சேர்க்கலாம். தண்ணீர் கொதிக்கும்போது சுமார் 2 டீஸ்பூன் இந்த அரிசி நொய்யை இட்டு வேகவிட்டு கஞ்சியாக்கி, துளி உப்பு சேர்த்து ஒருவேளை குழந்தைக்கு ஊட்டி விடவும். 8 மாதம் 9 மாதம் என்று ஆகும்பொழுது இந்தக் கஞ்சியைக் கூழ்போல கெட்டியாகக் கிண்டிக் கொண்டு, அதில் ஒரு சொட்டு நெய்கூட்டி குழந்தைக்கு ஊட்ட, வயிற்றுக்குள் எளிதாக நழுவிச் செல்லும். அதன் பிறகு சிறிது வெந்நீர் புகட்ட எளிதில் கூழ் செரித்து விடும். குழந்தை வளர வளர தாயாரை நம்ப வேண்டிய நிலையும் மாறி உணவை மட்டுமே சாப்பிடும் போது அதை "அன்னாசீ' என்று அழைப்பார்கள். ஆயுர்வேத மருந்துகளில் குழந்தைக்குச் சளி குறையும், நன்றாகப் பசி எடுக்கவும் ரஜன்யாதி சூர்ணம் ஒரு சிட்டிகை எடுத்து, சிறிது தேன் நெய் குழைத்து நாக்கில் தடவி விடவும். காலை மாலை, தாய்ப்பால் பருகும் முன்னர் (சுமார் ஒரு மணி நேரம்) கொடுக்கவும். தாய்ப்பால் வளர ஸ்தன்ய ஜனன ரஸôயனம் எனும் லேஹ்யத்தை காலை மாலை வெறும் வயிற்றில் 5-10 கிராம் வரை நக்கிச் சாப்பிடவும்.

Related

ஹெல்த் ஸ்பெஷல் 1955040767802668883

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item