பளபள கிச்சன்.. பளிச் டிப்ஸ்!

விழாக் காலங்களில் வீட்டைப் பளிச்சென்று வைத்துக் கொள்ள யாருக்குத்தான் ஆசை இருக்காது? இதோ.. உங்கள் சமையலறையை சூப்பர் சுத்தமாகப் பராமரிக்க டிப்...

விழாக் காலங்களில் வீட்டைப் பளிச்சென்று வைத்துக் கொள்ள யாருக்குத்தான் ஆசை இருக்காது? இதோ.. உங்கள் சமையலறையை சூப்பர் சுத்தமாகப் பராமரிக்க டிப்ஸ் தருகிறார், நம் டிப்ஸ் நிபுணர் விஜயலட்சுமி ராமாமிர்தம். காய்கறி, பழங்களை நறுக்கியவுடன் குப்பைகளை உடனே குப்பைத் தொட்டியில் கொட்டி விடுங்கள். மேடையிலேயே சேர்த்து வைத்தால், அதன் மேல் ஈ மற்றும் பூச்சிகள் மொய்த்து நம்மை அறியாமலேயே வியாதிகளை பரப்பி விடும். இஞ்சி, தேங்காய் மூடி, காய்கள், இட்லி மாவு போன்றவற்றை அதன் உபயோகம் முடிந்த உடனேயே எடுத்து ஃப்ரிட்ஜில் வைத்து விடுங்கள். அவை கெட்டுப் போகாது என்பதுடன், மேடையும் சுத்தமாகவே இருக்கும். பால் (அ) சாம்பாரை கொதிக்கவிடும்போது வழிந்து பர்னரில் அடைத்துக் கொள்ளும். இதை உடனடியாக சுத்தம் செய்ய வேண்டும். அடுப்பின் 'நாப்'-ஐ அணைத்து, பர்னரை தடிமனான துணியால் கழற்றுங்கள். இதைத் தண்ணீர்க் குழாயின் கீழே காட்டினால், அடைப்புகள் நீங்கி விடும். பர்னரிலிருந்து சொட்டும் தண்ணீர் வடிந்த பிறகு, இதை எரிந்து கொண்டிருக்கிற மற்றொரு பர்னரின் மேல் தலைகீழாக வைத்தால், நிமிடத்தில் உலர்ந்து விடும். வாரம் ஒருமுறை, சுவரில் உள்ள ஒட்டடையை அகற்றி, ஜன்னல் கம்பிகளைத் துடையுங்கள். சமையல் பொருட்கள் வைத்திருக்கும் டப்பாக்கள், பாட்டில்கள் போன்றவற்றை ஒரு உலர்ந்த துணியால் துடைத்து பிசுக்கை அகற்றுவதை வழக்கமாக்கிக் கொண்டால், உங்கள் கிச்சன் எப்போதும் கிளாசிக்தான். சமையல் முடித்தவுடன் கொதிக்கும் வெந்நீரை மேடையின் மேல் விட்டு, ஒரு துணியால் நன்றாக அழுந்தத் துடையுங்கள். மேடை பளபளக்கும். மாதம் ஒருமுறை கிச்சனில் இருக்கும் எக்ஸாஸ்ட் ஃபேன், பல்புகள், கடிகாரம், மின்சார சிம்னி முதலியவற்றில் உள்ள தூசுகளை உலர்ந்த துணியால் துடைத்துவிடுங்கள். பிறகு ஈரத்துணியால் அவற்றை சுத்தம் செய்தால், பளிச்சென்று இருக்கும். கிச்சன் மேடையிலேயே மாவு சலிப்பது, சப்பாத்தி இடுவது, காய், கீரைகளை நறுக்குவது என்று சகலமும் செய்பவரா நீங்கள்? ஒரு பிளாஸ்டிக் ஷீட்டை விரித்து அதன் மேல் வைத்துக் கொண்டு வேலைகளை செய்தால், மேடை சுத்தமாக இருக்கும். மீந்த குழம்பு, ரசம் போன்றவற்றை அப்படியே 'சிங்க்'கில் கொட்டினால், அடைத்துக் கொள்ளும். இதில் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்துக் கலக்கி ஒரு பெரிய துளையுள்ள வடிகட்டியால் வடிகட்டினால், சக்கையைத் தனியே குப்பைத் தொட்டியில் போட்டு விடலாம். சிங்க்கில் எதுவும் அடைக்காது. சமையலறையில் கண்களைக் கவரும் வண்ணப் படங்கள், இயற்கைக் காட்சிகள் கொண்ட காலண்டர்கள், காய்கறிகள், பழங்களின் படங்களை ஒட்டி வையுங்கள். முடிந்தால், நல்ல படங்கள் பதித்த டைல்ஸ்களையே சமையலறைக்கு உபயோகியுங்கள். சுத்தத்துக்கு சுத்தம். மனசுக்கும் சந்தோஷம்!

Related

வீட்டுக்குறிப்புக்கள் 1797732665177673761

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item