கருப்பட்டி குழிபணியரம் தேவையான பொருட்கள் கருப்பட்டி குழி பணியாரம் பச்சரிசி - அரை டம்ளர் மைதா - அரை டம்ளர் கருப்பட்டி வெல்லம் - முக்கால் டம்...

கருப்பட்டி குழிபணியரம்
தேவையான பொருட்கள்
கருப்பட்டி குழி பணியாரம்
பச்சரிசி - அரை டம்ளர்
மைதா - அரை டம்ளர்
கருப்பட்டி வெல்லம் - முக்கால் டம்ளர்
துருவிய தேங்காய் - இரண்டு மேசை கரண்டி
பல்லாக நருக்கிய தேங்காய் - இரண்டு மேசை கரண்டி
ஏலக்காய் பொடி - அரை தேக்கரண்டி
உப்பு - கால் தேக்கரண்டி
வருத்த முந்திரி - 6 ( பொடியாக அரிந்து கொள்ளவும்)
முட்டை - ஒன்று (விருப்ப பட்டால்)
இட்லி சோடா - ஒரு சிட்டிக்கை
செய்முறை
அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து அரைத்து அத்துடன் மைதா ,உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்.அரைத்த மாவில் பொடியாக அரிந்த் தேங்காய், முட்டை,துருவிய தேங்காய் ஏலக்காய் பொடி இட்லி சோடா கலந்து வைக்கவும்.
கருப்பட்டியை சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு கரைந்த்தும் அதை கலக்கிய மாவில் வடிகட்டவும்.குழி பணியார சட்டியை காய வைத்து எண்ணை + நெய் சிறிது ஊற்றி மாவை முக்கால் பாகம் இருக்குமாறு ஊற்றவும்.தீயின் தனலை மிதமாக வைக்கவும், இல்லை என்றால் கரிந்து விடும்.இரண்டு முன்று நிமிட்த்தில் வெந்து விடும்,ஒரு பக்கம் வெந்த்தும் திருப்பி போட்டு மறுபக்கமும் வேகவிட்டு இரக்க்வும்.
சுவையான கருப்பட்டி குழிபணியாரம் ரெடி.
காலை உணவிற்கு(காரம்+ இனிப்பு) குழிபணியாரத்துடன் சுண்டலும் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். குட்டியாக இருப்பதால் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.எத்தனை உள்ளே போகுதுன்னே தெரியாது செட்டி நாடு ஸ்பெஷல் குழிபணியாரம்.இது என் சுவைக்கு ஏற்ப செய்துள்ளேன் சுவைத்து மகிழுங்கள்
தேங்காய் பல்லாக கீறிய தேங்காயாக இருந்தால் இன்னும் நல்ல இருக்கும், இதில் துருவிய தேங்காய் சேர்த்துள்ளேன்.
Post a Comment