காலி பிளவர் மிளகு ரோஸ்ட்--சமையல் குறிப்புகள்
காலி பிளவர் மிளகு ரோஸ்ட் பி ரைடு ரைஸ், வெஜிடபிள் பிரியாணி போன்ற உணவு வகைக்கு `சைடு டிஷ்`ஷாக காரசாரமாக ஒரு அயிட்டம் தயாரிக்க நினை...
காலி பிளவர் மிளகு ரோஸ்ட்
பிரைடு ரைஸ், வெஜிடபிள் பிரியாணி போன்ற உணவு வகைக்கு `சைடு டிஷ்`ஷாக காரசாரமாக ஒரு அயிட்டம் தயாரிக்க நினைக்கிறீர்களா, இந்த `காலி பிளவர் மிளகு ரோஸ்ட்’ தயாரித்துப் பாருங்கள். எல்லோருமே ஒரு பிடி கூடுதலாக சாப்பிடுவார்கள். செய்முறை இதோ…
தேவையானவை
காலிபிளவர் பெரியது – 1 சின்ன வெங்காயம் – 100 கிராம் பூண்டு – 6 பல் மிளகு – 1/2 டீஸ்பூன் வரமிளகாய் – 2 சீரகம் – 1/2 டீஸ்பூன் கருவேப்பிலை – சிறிது உப்பு – தேவையான அளவு நெய் – 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை
* வெங்காயம், பூண்டு இரண்டையும் பொடியாக அறிந்து கொள்ளவும்.
* காலி பிளவரை பெரிய பூக்களாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
* வாணலியில் நெய்விட்டு கடுகு, சோம்பு தாளித்து நறுக்கிய வெங்காயம், வெள்ளைப்பூண்டு இரண்டையும் வதக்கவும்.
* அத்துடன் காலிபிளவரைச் சேர்த்து சிறிது உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து மிதமாக சூட்டில் வேக விடவும்.
* மிளகு, சீரகம், வரமிளகாய் இவற்றுடன் சிறிது வெங்காயம் சிறிது வெள்ளைப்பூண்டு சேர்த்து அரைத்து, நெய்விட்டு வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
* காலிபிளவர் வெந்ததும், வதக்கிய மிளகு மசாலாவைச் சேர்த்து மிதமான சூட்டில் சிறிது நெய்விட்டு முறுகவிட்டு எடுத்து வைக்கவும்.
Post a Comment