பல்கர் உப்புமா---சமையல் குறிப்புகள்
தேவையான பொருட்கள் : · பர்கல் - 1 கப் · வெங்காயம் - 1 · பச்சை மிளகாய் - 2 · கருவேப்பில்லை - 4 இலை · உ...

https://pettagum.blogspot.com/2011/12/blog-post_4317.html
தேவையான பொருட்கள் :
· பர்கல் - 1 கப்
· வெங்காயம் - 1
· பச்சை மிளகாய் - 2
· கருவேப்பில்லை - 4 இலை
· உப்பு - தேவைக்கு
முதலில் தாளிக்க :
· எண்ணெய் - 1 தே.கரண்டி
· உளுத்தம் பருப்பு + கடலை பருப்பு - 1 மேஜை கரண்டி
செய்முறை :
· கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து, பருப்பினை போட்டு வறுக்கவும். வெங்காயம் + பச்சை மிளகாயினை நறுக்கி வைக்கவும்.
· அதன் பின், வெங்காயம் + பச்சை மிளகாய் + கருவேப்பில்லை சேர்த்து வதக்கவும்.
· இத்துடன், 2 கப் தண்ணீர் + உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
· கொதிவந்த உடன், பல்கரினை சேர்த்து நன்றாக கிளறி வேகவிடவும்.
· சுவையான சத்தான பல்கர் உப்புமா ரெடி.
குறிப்பு : பல்கரினை முதலில் வேகவைத்த பின்னர், வதக்கிய வெங்காயம் சேர்த்தும் உப்புமா
பல்கர்( Bulgur) என்றால் என்ன? பல்கர் என்பது கோதுமை ரவை..
அப்படி என்றால்,பல்கருக்கும் கோதுமை ரவைக்கும்(Cracked Wheat) என்ன வித்தியாசம்???????
கோதுமையினை ரவையாக அப்படியே உடைத்தால் அது கோதுமை ரவை'ஆனால் கோதுமையினை, வேகவைத்து பின்னர் சிறிது நேரம் அதனை காயவைத்து பின், ரவையாக உடைத்தால் அது தான் பல்கர்..(அதாவது புழுங்கல் அரிசிக்கும் பச்சரிக்கும் இருக்கும் வித்தியாசம் போல)
கோதுமை ரவை போல் இல்லாமல், பல்கர் வேக மிகவும் குறைந்த அளவு நேரமே எடுக்கும்.
பல்கரில் அதிக அளவு நார்சத்து- Dietary Fiber, Maganese இருக்கின்றது'இதில் குறைந்த அளவு கொழுப்பு சத்து இருப்பதால்'. அனவைருக்கும் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது'.
பல்கரில் , பிரவுன் ரைஸியை (Brown Rice) விட அதிக அளவு நார்சத்து இருக்கின்றது, கலோரியும் குறைவாக இருக்கின்றது..
சரி'இவ்வளவு சத்துகள் உள்ள பல்கரினை வைத்து செய்த பல்கர் உப்புமா'.செய்யலாம்.
Post a Comment