தேவையானவை பச்சரிசி - 3 கப் வெல்லம் - 3 கப் பொடித்த ஏலக்காய் - 1/4 டீஸ்பூன் நெய் - 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய் - தேவையான அளவ...

தேவையானவை
பச்சரிசி - 3 கப்
வெல்லம் - 3 கப்
பொடித்த ஏலக்காய் - 1/4 டீஸ்பூன்
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
அரிசியை அரை மணிநேரம் ஊறவைத்து தண்ணியில்லாமல் வடிகட்டி நிழலில் ஈரமில்லாமல் உலர்த்தி மாவாக்கவும்.
மாவு நொறநொறன்னு இருக்ககூடாது.
ஒரு பாத்திரத்தில் வெல்லம் போட்டு அது சிறிது நீர்விட்டு காய்ச்சவும்.வெல்லம் கரைந்ததும் மண்ணில்லாமல் வடிகட்டவும்.
வடிகட்டிய வெல்லத்தை மீண்டும் காய்ச்சி பாகு எடுக்கவும்.
ஒரு கிண்ணத்தில் நீர் விட்டு வெல்லத்தை விடவும் அது உருட்டும் பதத்திற்க்கு வந்தால் அதுதான் சரியான பதம்.
சரியான பதம் வந்ததும் இறக்கி அரிசி மாவு+ஏலக்காய் போட்டு நன்கு கிளறவும்.அதன் மீது நெய்விடவும்.
பின் உருண்டைகளாக உருட்டி ரொம்ப மெல்லியதாக இல்லாமலும்,தடினமாக இல்லாமலும் தட்டி எண்ணெயில் பொரிக்கவும்.
அதிரசத்திற்க்கு ஈரமாவு தான் பயன்படுத்த வேண்டும்.
மாவை கிளறி உடனே சுடுவதை விட 2 நாள் கழித்து சுட்டால் நன்றாக இருக்கும்.
Post a Comment