மசாலா பிரெட் பஜ்ஜி--சமையல் குறிப்புகள்
மசாலா பிரெட் பஜ்ஜி வ ழக்கமான வாழைக்காய் பஜ்ஜி, வெங்காய பஜ்ஜிக்கு பதிலாக பிரெட் பஜ்ஜி தயாரித்துப் பாருங்கள். அதிலும் இந்த மசாலா பிரெட் பஜ்ஜ...
மசாலா பிரெட் பஜ்ஜி
வழக்கமான வாழைக்காய் பஜ்ஜி, வெங்காய பஜ்ஜிக்கு பதிலாக பிரெட் பஜ்ஜி தயாரித்துப் பாருங்கள். அதிலும் இந்த மசாலா பிரெட் பஜ்ஜி ஒரு வித்தியாசமான சுவையுடன் சூடாக சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.
தேவையானவை
சிலைஸ் பிரெட் – 1 பாக்கெட் கடலைமாவு – 1 கப் அரிசி மாவு – 1/4 கப் தேங்காய் – 1 மூடி பச்சைமிளகாய் – 3 அல்லது 4 பூண்டு – 2 பல் இஞ்சி – சிறு துண்டு பெரிய வெங்காயம் – 1 உப்ப – தேவையான அளவு ரீபைண்டு எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
* பிரெட் துண்டுகளை முக்கோண வடிவில் குறுக்காக வெட்டிக் கொள்ளவும்.
* தேங்காய், பச்சைமிளகாய், பூண்டு, இஞ்சி வெங்காயம் இவைகளை நைஸாக அரைத்துக் கொள்ளவும்.
* கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, இவைகளுடன் தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.
* வாணலியில் ரீபைண்ட் எண்ணெய்விட்டு காய வைக்கவும்.
* அரைத்த மசாலா சிறிது எடுத்து பிரெட் சிலைசின் இரண்டு பக்கங்களிலும் தடவி பஜ்ஜி மாவில் நனைத்து காய்ந்த எண்ணெயில் போட்டு இருபுறமும் திருப்பிவிட்டு எடுக்கவும்.
* தக்காளி சாசுடன் சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.
Post a Comment