சேமியா ப்ரைட் புலாவ் --சமையல் குறிப்புகள்
சேமியா ப்ரைட் புலாவ் தேவையான பொருள் சேமியா- 1/2 கிலோ பச்சை பட்டாணி- 50கிராம் கேரட்- 25 கி...

சேமியா ப்ரைட் புலாவ் |
தேவையான பொருள்
சேமியா- 1/2 கிலோ
பச்சை பட்டாணி- 50கிராம்
கேரட்- 25 கிராம்(நீளவாக்கில் வெட்டியது)
உருளைக்கிழங்கு- 25 கிராம்
உப்பு- தேய்வையான் அளவு
தண்ணிர்- தேவையான அளவு
எண்ணெய்- 100 கிராம்
இஞ்சி பூண்டு விழுது- சிறிதளவு
வெங்காயம்- 50 கிராம்
தக்காளி- 3
தாளிப்பதற்கு
லவங்கம்- 3
சோம்பு- 1/4 தேக்கரண்டி
பிரிஞ்சி இலை- 2
மசாலா பவுடர்- சிறிதளவு
மல்லி,புதினா- சிறிதளவு
பச்சை மிளகாய்- 5(நீளவாக்கில் நறுக்கியது)
கறிவேப்பிலை- கொஞ்சம்
செய்முறை
அகலமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி மசாலா பொருட்களை தாளித்து,நறுக்கிய
வெங்காயம்,தக்காளி,பச்சை மிளகாய்,புதினா போட்டு சிறிது நேரம்
வதக்கவும்.பிறகு பச்சை பட்டாணி,கேரட்,உருளைக்கிழங்கு சிறிது உப்பு போட்டு
தேவையான அளவு நீர் ஊற்றி குக்கரில் 3 நிமிடங்கள் வேக வைத்து கொள்ளவும்
பின்பு சேமியாவை லேசாக நொறுக்கி,அகலமான பாத்திரத்தில் போட்டு தேவையான
அளவு தண்ணிர் விட்டு வேக வைத்த கலவை இஞ்சி பூண்டு அரைத்தது,மசாலா பவுடர்
சிறிதளவு கொத்தமல்லி,கருவேப்பிலை போட்டு மூடி சிறுது நேரம்
வைக்கவும்.பிறகு 1ஸ்பூன் நெய் ஊற்றி தேவைப்பட்டால் வறுத்த
முந்திரிப்பருப்பு சேர்த்து பரிமாறலாம்.செய்வது எளிது.
சாப்பிடுவதற்க்கு ருசியாக இருக்கும்.
Post a Comment