பிரியாணி தம் போடும் டிப்ஸ் பிரியாணி என்றாலே இஸ்லாமியர்களின் கல்யாண பிரியாணி என்றால் அனைவருக்கும் விருப்பமே. நிறைய பேருக்கு இந்...
பிரியாணி என்றாலே இஸ்லாமியர்களின் கல்யாண பிரியாணி என்றால் அனைவருக்கும் விருப்பமே.
நிறைய பேருக்கு இந்த பிரியாணி தம் சந்தேகம் உண்டு இதில் சில டிப்ஸ்கள் கொடுத்து எனக்கு தெரிந்ததை விளக்கி உள்ளேன். இது அனைவருக்கும் பயன் படும் என்று நினைக்கிறேன்.
மற்ற சமையலை விட இது தான் செய்வது ரொம்ப சுலபம், ஈசியும் கூட.
பிரியாணிக்கு கூட்டு கிரேவி தயாரித்து விட்டு. கிரேவி தயாரிகும் போதே அரிசியை ஊற போட்டு விடவேண்டும்.20 நிமிடம் என்பது போதுமானது, அதற்கு அதிகமாக ஊறினாலும் பரவாயில்லை. உலை கொதிக்கும் போது சீக்கிரத்தில் எடுத்து விடலாம்.
வடித்து தம் போட்டால் தான் ருசியான பிரியாணி.
பிரியாணி செய்ய தாளிக்க உலை கொதிக்க என்று இரண்டு சமமான சட்டி தேவை., சின்ன சட்டியில் உலை கொதிக்க போட்டால் அரிசி சிக்கி பாதி வெந்து வேகாமல் இருக்கும்.
தண்ணீர் நன்றாக கொதிக்கும் போது அரிசியை தட்டவேண்டும்.உடனே 7 லிருந்து பத்து நிமிடத்திற்குள் முக்கால் பாகம் வெந்து விடும், உடனே பெரிய கண் வடிகட்டியில் ஊற்றி கஞ்சியை தனியாக எடுத்து வைக்கனும்.

தம் போடும் கருவி தனியாக விற்கிறது, அது கிடைக்காதவர்கள்.
கனமான தோசைக்கல்லை கேஸ் அடுப்பின் மேல் வைக்கலாம்.
அரிசி கொதிக்க வைக்க அதே அளவு சட்டி கிடைக்காதவர்கள்.
ஒரே அளவில் இரண்டு சட்டியில் சமமாக கொதிக்கவைத்தும் வடித்து தம் போடலாம்.
சாதம் ரொம்ப வெந்த பிறகு தம் போட்டால் குழைந்து பிரியாணி களி, கஞ்சியாகி விடும்.

தம் போடும் முறை (அந்த தம் கிடையாது)
கேஸ் அடுப்பில் தீயின் தனலை மிக மெல்லிய அளவில் வைத்து அதன் மேல் தம் போடும் கருவி (அ) கனமான தோசைகல்லை வைத்து அதற்கு மேல் பிரியாணி சட்டியை வைத்து மூடி போட்டு வடித்த சுடு கஞ்சியை சட்டியில் மேல் வைத்து 20 நிமிடம் தம்மில் விடவும்.
வெந்ததும் எடுத்து ரொம்ப போட்டு கிளறக்கூடாது. லேசாக பிரட்டி விடவேண்டும்.

இது பிரியாணி பதிவில் கேட்ட கேள்வி
(1. இந்த பாத்திரம் வைத்தாலும் பிரியாணி வெந்து கீழிறக்கும் வரை அடுப்பு சிம்மில் எரிய வேண்டுமா?
2. நேரடியாக அடுப்பில் வைப்பதற்கும் இந்த தம்போடும் கருவியில் வைப்பதற்கும் என்ன வித்தியாசம்? நெருப்பு நேரடியாக படாது ஆனால் சூடு மட்டும் செல்லும் என்று நினைக்கிறேன். சிலர் அகன்ற தண்ணீர் உள்ள பாத்திரத்தின் மேல் பிரியாணி சட்டியை வைக்க சொல்லி தம் போட சொல்லி கேட்டிருக்கிறேன். ஆனாலும் அப்படி செய்தால் பிரியாணி பொல பொலவென ட்ரையாக வருவதில்லை. )
1. தாளித்த கூட்டு தனியாக முதலே வைத்திருந்தால். அரிசி கொதித்து வடிக்கும் சமையத்தில் சிம்மில் வைத்து சூட்டுபடுத்தி தம்மில் ஏற்றும் போது முழுவதும் 20 நிமிடமும் தீ சிம்மில் எரிய வேண்டும்.
2. தம் போடும் கருவி அல்லது தோசை தவ்வா வைத்தால் அடிபிடிக்காது.நெருப்பு நேராக படாது.
சிலர் வாயகன்ற பாத்திரத்தில் தண்ணீரை மேலே வைப்பார்கள். இது தண்ணீர் இல்லை வடித்த சூடான கஞ்சி. அப்படி இல்லையானால் கனமான பாத்திரமும் வைக்கலாம்.
சாதம் பொல பொலன்னு வரலை என்றால் நீங்கள் முக்கால் பதத்தில் வடிக்காமல் நல்ல வெந்து வடித்து இருப்பீர்கள்.
நிறைய சாதம் வைக்கும் போது தம் ஆகிக்கொண்டு இருக்கும் போது பாதியில் எடுத்து கிளறி பிரட்டி விட்டு மீண்டும் வைக்கவும்.
அரிசி கொதிக்க வைக்க பெரிய சட்டி இல்லாதவர்கள். கூட்டில் அரிசி ஒன்றுக்கு ஒன்னறை அளவிற்கு தண்ணீரை ஊற்றி கொதிக்கவிட்டு தண்ணீர் வற்றும் போது இதே போல் தீயை சிம்மில் வைத்து புழுங்க விட்டு இரக்கவும்
இதே ஹைத்ராபாத் பிரியாணி ஒரு தனி வகை, அதில் வெங்காயத்தை பொரித்து போடுவார்கள், தக்காளி சேர்க்கமாட்டார்கள், தக்காளிக்கு பதில் தயிர் அதிகம் சேர்ப்பார்கள். மற்றும் வாசனை பொருள்கள் அதிகம் இருக்கும்
குக்கரில் பிரியாணி வைப்பவர்கள் குறைந்த தனலில் முன்று விசிலில் இரக்கி விடவும்.
செட்டி நாடு பிரியாணி வகைகள் மிளகு, தேங்காய் பால், மற்ற மசாலாக்களை எல்லாம் அரைத்து சேர்த்து அப்படியே தண்ணீர் அளந்து ஊற்றி செய்வார்கள்.
கீழே உள்ள லிங்கில் முன்று வகையான பிரியாணி உள்ளது அதில் குக்கர் முறையும் இருக்கு
மீன் பிரியாணி
வெஜ் பிரியாணி
சென்னையில் கல்யாணஙகளில் 10 படி தேக்ஷாவில் தான் செய்வார்கள்,அவர்கள் தம் போட நெருப்பு மூட்டி தான் பிரியாணி செய்வார்கள். அதில் கீழே நெருப்பு எல்லாம் எடுத்து தேக் ஷா மூடியின் மேல் போட்டு விடுவார்கள். மீதி நெருப்பை அடுப்பை சுற்றி போடுவார்கள், அந்த தனலிலேயே வெந்து விடும், நிறைய ஆக்கும் கல்யாண பிரியாணியின் ருசிக்கு ஈடு இனை எதுவுமே இல்லை.
Post a Comment