தேன்குழல்--சமையல் குறிப்புகள்
தேன்குழல் பயத்தம் பருப்பு - ஒரு கப் (நூறு கிராம்) பச்சரிசி மாவு - நாலு கப் எள் - இரண்டு டீ ஸ்பூன் வெண்ணை - ஒரு டீ ஸ்பூன் பயத்தம் பருப்பை க...
- பயத்தம் பருப்பை குக்கரில் குழைய வேகவைத்து ஆறவைத்து கொள்ளவும்.
- இதோடு பச்சரிசி மாவு, உப்பு, எள், வெண்ணை சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்து கொள்ளவும்.
- இதை, தேன்குழல் அச்சில் போட்டு, நன்றாக காய்ந்த ரீபைண்டு ஆயில் அல்லதுதேங்காய் எண்ணையில், பிழிய வேண்டும்.
- எண்ணெய் லேசாக பொங்கி, பப்பில்கள் (bubbles) அடங்கிய பின், திருப்பி விடவும்.
- பொன்னிறமாக சிவந்த பின்எண்ணெய் வடித்து, எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- பயத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பை எல்லாம் சம அளவில் (1:1:1) தனித்தனியாக வறுத்து, மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்.
- ஒரு கப்பு மாவிற்கு, இரண்டு கப் அரிசி மாவு, 2 டீ ஸ்பூன் வெண்ணை, உப்பு என்றகணக்கில் சேர்த்து நன்றாக கலந்து, தண்ணீர் விட்டு பிசைந்து தேன்குழல் அச்சில் பிழிந்து எண்ணெயில் பொரிக்கலாம்.
- இதில் தேவையென்றால் சீரகம், ஓமம் கூட போட்டுக் கொள்ளலாம்.
Post a Comment