ஒரு கொசுவர்த்தி சுருள் 100 சிகரெட்டுக்கு சமம்!---உபயோகமான தகவல்கள்,

ஒரு கொசுவர்த்தி சுருள் 100 சிகரெட்டுக்கு சமம்! ...

ஒரு கொசுவர்த்தி சுருள் 100 சிகரெட்டுக்கு சமம்!
கொசுவர்த்தி சுருள் மற்றும் திரவ வடிவிலான மருந்து ஆகியவை உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியவை என்று மருத்துவ நிபுணர்கள் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தபோதிலும், ஒரு கொசுவர்த்தி சுருளிலிருந்து வரும் புகையை சுவாசிப்பது 100 சிகரெட்டு புகையை சுவாசிப்பதற்கு சமமானது என்று தற்போது நடத்தப்பட்டுள்ள புதிய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. மலேசியாவில் உள்ள இருதய ஆராய்ச்சி அறக்கட்டளை ஒன்று நடத்திய ஆய்விலேயே இந்த அதிர்ச்சியான தகவல் தெரியவந்துள்ளது. "கொசுவர்த்தி சுருளின் ஆபத்தை மக்களில் ஏராளானமானோர் உணராமலேயே உள்ளனர். ஆனால் இந்த கொசுவர்த்தி சுருளிலிலிருந்து வரும் புகை நுரையீரலை வெகுவாக பாதிக்கிறது. அதாவது ஒரு கொசுவர்த்தி சுருளின் புகை, 100 சிகரெட்டை புகைப்பதினால் ஏற்படும் பாதிப்புக்கு சமமானதாக உள்ளது" என்று அதிர்ச்சி குண்டை வீசுகிறார் இந்த ஆய்வை மேற்கொண்ட மேற்கூறிய ஆய்வு மையத்தின் இயக்குனர் சந்தீப் சால்வி. " காற்று மாசும் நமது சுகாதாரமும்" என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாநாடு ஒன்றில் கலந்துகொண்டு பேசுகையில் இத்தகவலை தெரிவித்த அவர், மனித உடலில் காற்றினால் வரும் மாசு குறித்த விழிப்புணர்வு மிகவும் குறைவாகவே உள்ளது. மேலும் இந்திய டாக்டர்களிடையே ஆராய்ச்சி செய்யும் கலாச்சாரம் மிகவும் குறைவாகவே காணப்படுகிறது. அறைக்குள் காணப்படும் காற்று மாசு கூட உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடியதாகவே உள்ளது" என்றும் அவர் தெரிவித்தார். காற்று மாசு இந்தியாவில் எந்த அளவுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாக உள்ளதை தலைநகர் டெல்லியை வைத்தே முடிவு செய்துகொள்ளலாம் என்று இந்த மாநாட்டில் தெரிவித்த டாக்டர் ஒருவர், அது தொடர்பான ஆய்வு தகவலையும் தெரிவித்தார். டெல்லியில் வசிக்கக் கூடியவர்களில் 55 விழுக்காட்டினர்,பிரதான சாலையிலிருந்து 500 மீட்டர் தொலைவுக்கு உள்ளாகவே வசிக்கின்றனர். இதனால் அவர்கள் பல்வேறு வகையான உடல் நலக்கோளாறுகளை சந்திக்க வேண்டியதுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. சுற்றுச்சூழலுக்கு வாகனங்களால் ஏற்படும் மாசு மிக முக்கிய காரணமாக அமைந்துள்ளது. தற்போது அதிகரித்துவரும் மரபணு குறைபாடுகளுக்கும் காற்று மாசு ஒரு முக்கிய காரணியாக விளங்குகிறது. இந்தியாவில் ஆண்டொன்றுக்கு சராசரியாக 5 வயதுக்குட்பட்ட 10 லட்சம் குழந்தைகள் சுவாச கோளாறு காரணமாக உயிரிழப்பதாக தெரியவந்துள்ளது. காற்று மாசுபடுவதற்கு தொழிற்சாலைகளும் ஒரு முக்கிய காரணமாக அமைவதாகவும், எனவே அவற்றை நகருக்கு வெளியே அமைக்க வேண்டும் என்றும் இம்மாநாட்டில் ஆய்வறிக்கை சமர்ப்பித்து பேசிய டாக்டர்கள் தெரிவித்தனர்.

Related

ஹெல்த் ஸ்பெஷல் 1850468605432618634

Post a Comment

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement


Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள். சிந்தனை துளிகள். இந்த நாள் இனிய நாள் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம்! முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item