வறுத்தரைத்த குழம்பு--சமையல் குறிப்புகள்
வறுத்தரைத்த குழம்பு தேவையான பொருட்கள்: புளி – சிறிய எலுமிச்சை அளவு மஞ்சள் பொடி – 1 சிட்டிகை உப்பு – தேவையான அளவு கருவேப்பிலை- ஒரு ஆர்க்கு...

- புளியைக் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.
- எண்ணெய் விடாமல் வெறும் வாணலியில், காய்ந்த மிளகாய், துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, கொத்தமல்லி விதை, வெந்தயம், எள், பச்சரிசி என்று ஒவ்வொன்றாக தனித்தனியாக வறுத்து ஆற வைத்துக் கொள்ளவும். அதே சூட்டிலேயே அடுப்பை அணைத்து விட்டு தேங்காய்த் துருவலை சேர்த்து லேசாக வறுத்துக் கொள்ளவும்.
- இவை நன்றாக ஆறியதும் நன்றாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
- வாணலியில் எண்ணை விட்டு, கடுகு தாளித்து, புளிநீரைச் சேர்த்து, மஞ்சள் பொடி, உப்பு போட்டு, புளி வாசனை போக கொதிக்க ஆரம்பித்ததும், அரைத்த விழுதைச் சேர்த்து மேலும் பத்து நிமிடங்கள் கொதிக்க விடவும்.
- கொத்தமல்லி கருவேப்பிலை தூவி, பெருங்காயம் தூவி மூடி வைக்கவும்.
- இதில் பூசணி, பரங்கி, முருங்கை போன்ற காய்கறிகள் ரொம்ப நன்றாக இருக்கும்.
- அப்படியே கொஞ்சம் தயிர் சாதத்துக்கும் தொட்டுக் கொண்டு சாப்பிட்டுப் பாருங்கள். இன்னும் இரண்டு பேர் சாப்பாட்டை சாப்பிட வைக்கும்.
Post a Comment