மின்சாரத்தை மிச்சப்படுத்துங்கள்--கணிணிக்குறிப்புக்கள்

மின்சாரத்தை மிச்சப்படுத்துங்கள் எங்கு பார்த்தாலும் மின்வெட்டு. கிடைக்கின்ற சிறிது நேரத்தைப் பயன்படுத்தி நம் கம்ப்யூட்டர்களை இயக்கி ...

மின்சாரத்தை மிச்சப்படுத்துங்கள்

எங்கு பார்த்தாலும் மின்வெட்டு. கிடைக்கின்ற சிறிது நேரத்தைப் பயன்படுத்தி நம் கம்ப்யூட்டர்களை இயக்கி பைல்களைத் தயார் செய்து அனுப்ப வேண்டியுள்ளது. அனைவருக்கும் நாம் வீணாக மின் சக்தியைப் பயன்படுத்தக் கூடாது என்ற எண்ணம்மேலோங்கியுள்ளது. தேவைப்படாத போது மின்விசிறிகளையும் விளக்குகளையும் அறைகளில் நாம் இல்லாத போது அணைத்து விட்டு தேவைப்படும்போது போட்டுக் கொள்கிறோம். ஆனால் கம்ப்யூட்டரில் என்ன செய்வது? அடிக்கடி அணைத்து பின் மீண்டும் இயக்க முடியாதே! இதற்கு கம்ப்யூட்டரிலேயே தரப்பட்டுள்ள சில வழிகளைப் பார்க்கலாம்.நாம் கம்ப்யூட்டரில் செயல்படாத போது மின் சக்தியை வீணாகப் பயன்படுத்தாமல் இருக்க விண்டோஸ் இயக்கத் தொகுப்பு சில வழிகளைத் தந்துள்ளது. இந்த வழி லேப் டாப் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துபவர்களுக்கு அதிகமாக உதவும் வகையில் உள்ளது. முதலில் ஓர் எளிய வழியைப் பார்க்கலாம். டெஸ்க் டாப்பில் காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Properties என்பதில் கிளிக் செய்க. இதனால் நமக்கு Display Properties விண்டோ கிடைக்கும். இதில் Screen Saver டேபில் கிளிக் செய்திடவும். கிடைக்கும் விண்டோவின் கீழாக Power என்ற பெயரில் ஒரு பட்டன் இருக்கும். இந்த பட்டனில் கிளிக் செய்தால் Power Options Properties என்ற விண்டோ கிடைக்கும். இதில் பல ஆப்ஷன்ஸ் கிடைக்கும். முதல் ஆப்ஷன்ஸ் மூலம் கம்ப்யூட்டர் சில காலம் எந்த செயல்பாட்டிலும் ஈடுபடாமல் இருந்தால் மானிட்டரை ஆப் செய்திடும்படி அமைக்க வழி செய்திருக்கும். இதில் எவ்வளவு நேரம் என்பதனை அம்புக் குறியைக் கிளிக் செய்வதன் மூலம் அமைக்கலாம். இந்த நேரம் அங்கு தரப்பட்டிருக்கும் நான்கு ஆப்ஷன்களில் மிகக் குறைந்ததாக இருப்பது நல்லது. இதனை செட் செய்தால் செட் செய்த காலத்தில் கம்ப்யூட்டர் செயல்பாடின்றி இருந்தால் மானிட்டர் தானாக ஆப் ஆகிவிடும். மீண்டும் மவுஸை சற்று ஆட்டினாலோ அல்லது கீ போர்டில் ஒரு கீயை தட்டினாலோ மானிட்டர் உயிர் பெறும். அடுத்த ஆப்ஷன் மூலம் கம்ப்யூட்டரின் ஹார்ட் டிரைவை ஆப் செய்திடலாம். குறிப்பிட்ட காலம் வரை நீங்கள் எந்த செய லையும் மேற்கொள்ளவில்லை என்றால் ஹார்ட் டிஸ்க்கிற்குச் செல்லும் மின்சாரம் நிறுத்தப்பட்டு பின் மீண்டும் தேவைப்படுகையில் கிடைக்கும். இங்கும் நேரத்தை செட் செய்திட முன்பு கூறியபடி வசதி தரப்பட்டுள்ளது. இதனை நான் அவ்வளவாகப் பயன்படுத்துவது இல்லை; ஏனென்றால் இதனால் மிச்சப்படுத்தப்படும் மின்சாரம் குறிப்பிட்டுச் சொல்லும் வகையில் இருக்காது. இதற்குப் பதிலாக கம்ப்யூட்டரை ஸ்டேண்ட் பை என்னும் நிலையில் வைக்கலாம். ஹார்ட் டிஸ்க்கையும் இந்த வழக்கத்திற்குள் கொண்டு வர வேண்டும் என்றால் அதன் காலத்தை 30 நிமிடம் முதல் 1 மணி வரை அமைக்கலாம். மூன்றாவது ஆப்ஷன் கம்ப்யூட்டரை ஸ்டேண்ட் பை நிலையில் வைக்க உதவுகிறது. இதனால் மிக மிகக் குறைந்த அளவில் மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. இந்த ஆப்ஷனை அமைத்தால் மீண்டும் கம்ப்யூட்டர் இயக்கத்தைப் பெற கம்ப்யூட்டரில் உள்ள பவர் பட்டனை அழுத்த வேண்டியதிருக்கும். இருப்பதிலேயே மிகப் பயனுள்ள ஆப்ஷன் இதுதான். இதன் மூலம் மிக அதிகமாக மின்சக்தியை மிச்சம் செய்திடலாம். மேலும் விரைவாக இயக்கத்தைத் திரும்பவும் பெற முடிகிறது. அடுத்த ஆப்ஷன் ஹைபர்னேஷன் என அழைக்கப்படுகிறது. இதன் மூலம் அனைத்து பைல்களும் சேவ் செய்யப்பட்டு மின்சக்தி நிறுத்தப்படுகிறது இதனால் நீங்கள் செட் செய்திடும் நேரம் மிக அதிகமாக இருக்க வேண்டும். இதிலிருந்து மீண்டும் கம்ப்யூட்டர் தன் இயக்கத்தைப் பெற சிறிது கூடுதலாக நேரம் எடுக்கும். மேலும் நீங்கள் பயன்படுத்திக் கொண்டிருந்த புரோகிராம்கள் அனைத்தும் தானாகத் திறக்கப் பட்டுக் காத்திருக்கும். மேலே கூறப்பட்ட வழிகளில் எது உங்கள் கம்ப்யூட்டர் செயல்பாட்டிற்குச் சரியாக உள்ளதோ அதனைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தலாம்

Related

கணிணிக்குறிப்புக்கள் 8720064545493275150

Post a Comment

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement


Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள். சிந்தனை துளிகள். இந்த நாள் இனிய நாள் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம்! முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item