தக்காளி பிரைடு ரைஸ்---சமையல் குறிப்புகள்
தக்காளி பிரைடு ரைஸ் தேவையானவை பாசுமதி அரிசி – 1 கப் பெரிய வெங்காயம் – 1 தக்காளி பெரிய சைஸ் – 2 புதினா (ஆய்ந்தது) – கப் இஞ்...
தக்காளி பிரைடு ரைஸ்
தேவையானவை
பாசுமதி அரிசி – 1 கப்
பெரிய வெங்காயம் – 1
தக்காளி பெரிய சைஸ் – 2
புதினா (ஆய்ந்தது) – கப்
இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
தேங்காய் பால் – 1 கப்
தண்ணீர் – 1 கப்
உப்பு – தேவையான அளவு
முந்திரிப்பருப்பு – 10
பட்டை, கிராம்புத்தூள் – 1/2 டீஸ்பூன்
நெய், எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
செய்முறை
* தக்காளி, புதினா, பச்சைமிளகாய், நறுக்கிய வெங்காயத்தில் சிறிது ஆகியவற்றை மிக்சியில் போட்டு நைசாக அரைக்கவும்.
* வாணலியில் நெய், எண்ணெய் கலவையை விட்டு பட்டை, கிராம்புத்தூள் போட்டு தாளித்து இஞ்சி பூண்டு விழுது சேர்த்து சிவக்க விடவும்.
* பிறகு நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
* வதங்கியதும் அரைத்த தக்காளி விழுது, தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
* குக்கரில் பாசுமதி அரிசியைப் போட்டு, வதக்கிய கலவையைச் சேர்க்கவும். அத்துடன் தேங்காய்ப்பால், தண்ணீர் தலா ஒரு கப் சேர்த்து உப்பு தேவையான அளவு சேர்த்து மூடி வைத்து வேகவிடவும்.
* வெந்ததும் தக்காளி பிரைடு ரைஸ் ரெடி. இதற்கு தொட்டுக்கொள்ள வெங்காய தயிர் பச்சடி ஏற்றது.
Post a Comment