தர்மம் செய்வதன் முக்கியத்துவம் அறிவிப்பாளர்: அபூமூஸா அல்அதி (ரலி) அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ""தர்மம் செய்வது ஒவ்வொரு...

தர்மம் செய்வதன் முக்கியத்துவம்
அறிவிப்பாளர்: அபூமூஸா அல்அதி (ரலி)
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
""தர்மம் செய்வது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் அவசியமாகும்,'' நான் வினாவினேன்:
""ஒருவரிடம் செல்வம் இல்லையென்றால்...?''
அண்ணலார் (ஸல்): அவன் சம்பாதித்து தானும் உண்ணாவேண்டும்; ஏழைகளுக்கும் தரவேண்டும்!''
நான்: ""அவனால் அவ்வாறு செய்ய முடியவில்லையென்றால்...?''
அண்ணலார் (ஸல்): ""தேவையுள்ள, துன்பத்திற்குள்ளான மனிதர் எவருக்கேனும் உதவட்டும்!''
நான்: ""அதுவும் அவரால் முடியவில்லையென்றால்...?''
அண்ணல்நபி (ஸல்): ""மக்களை நன்மை
புரியும்படி அவர் தூண்டட்டும்!''
அண்ணல் நபி (ஸல்): ""மக்களுக்குத் தீங்கிழைக்காதிருக்கட்டும்! இதுவும் ஒரு நற்செயலே!'' (முஸ்லீம்)
அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி)
அண்ணல் நபி(ஸல்) அவர்கள் நவின்றார்கள்:
""எவர் தன் சகோதரருக்குத் தேவையேற்படும் நேரத்தில் அவருக்கு உதவுகின்றாரோ அவருக்குத் தேவை ஏற்படும் நேரத்தில் அல்லாஹ் உதவி புரிவான்!'' (புகாரி, முஸ்லீம்)
விளக்கம்: ஒரு நபிமொழியில் கூறப் பட்டுள்ளது: ""அல்லாஹ் தன் அடியார்கள் சிலரை மக்களின் தேவைகளை நிறைவு செய்வதற்காகப் படைத்துள்ளான். மக்கள் தம் தேவைகளை அவர்களிடம் தெரிவிக்கின்றார்கள். அவர்கள் அவற்றை நிறைவு செய்து விடுகின்றார்கள். இத்தகையோர் இறுதித் தீர்ப்பு நாளில் அல்லாஹ்வின் கோபத்திலிருந்தும், அவன் தரும் வேதனையி
லிருந்தும் பாதுகாப்பாக இருப்பார்கள்,''
புகழ்பெறும் நோக்கம் வேண்டாம்
அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி)
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் கூறினான்: ""மனிதர்களால் கற்பிக்கப்பட்ட பிற கடவுளர்களை என்னோடு இணைசேர்ப்பதை விட்டு நான் மிகவும் தேவையற்றவனாவேன். எவன் ஒரு நற்செயல்
புரிகின்றானோ, அதில் என்னுடன் வேறொருவனையும் இணையாக்கிவிட்டானோ, அத்தகையவனின் செயலுடன் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை. நான் அவனது செயலைக் குறித்து வெறுப்படைந்துள்ளேன். அந்தச் செயல், என்னுடன் அவன் யாரை இணைவைத்தானோ அவனுக்குரியதாகும்!'' (முஸ்லீம்)
விளக்கம்: எந்த ஒரு நற்செயலாயிருந்தாலும் அது இறைவணக்கமாகட்டும், கொடுக்கல் வாங்கலாகட்டும், தொழுகையாகட்டும், மக்கள் தொண்டாகட்டும் எதுவாயிருப்பினும் சரி. பெயர், புகழ் பெறவேண்டும் என்ற எண்ணமோ, ஒரு குழுவினரிடமிருந்து அல்லது தனி நபரிடமிருந்து பாராட்டுப் பெற வேண்டும் எனும் நோக்கமோ, தூண்டுகோலாக இருக்குமாயின் அல்லாஹ்விடம் அச்செயலுக்கு ஒரு சிறிதும் மதிப்பிருக்காது. அல்லாஹ்வின் உவப்பைப் பெறுவது அச்செயலுக்கு தூண்டுகோலாக இருந்து, மக்களிடம் பாராட்டு பெறுவதும் நோக்கமாக இருக்குமாயின் அந்தச் செயலும் வீணாகப் போய்விடும்.
தொழுகையே முக்கியம்
தொழுகையை அதிகப்படுத்த வேண்டும். இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி) அவர்கள், இதுபற்றி கூறும் போது, ""எனக்கு காற்று பாரிச வாய்வு (பீடிப்பு) ஏற்பட்டிருந்தது. எனவே, நான் அண்ணல் நாயகம்(ஸல்) அவர்களிடம், தொழுகை செய்வது பற்றி வினவிய போது, "நின்று தொழுவீர்! முடியாவிடில் உட்கார்ந்து தொழுவீர்! இதுவும் முடியாவிடில் ஒருக்கணித்துப் படுத்துத் தொழுவீர்!'' என்றார்கள்.எந்த நிலையிலும் தொழுகையைக் கைக்கொள்ள வேண்டும் என்பது அண்ணலாரின் கருத்தாக இருந்தது.
Post a Comment