Live CD என்றால் என்ன? கணிணிக்குறிப்புக்கள்

Live CD என்றால் என்ன? லைவ் சீடி அல்லது லைவ் டிவிடி என்பது கணினியின் செயற்பாட்டை ஆரம்பிக்கக் கூடியவாறு தன்னகத்தே ஒரு இயங்கு தளத்தைக்கொண்ட ஒர...

Live CD என்றால் என்ன? லைவ் சீடி அல்லது லைவ் டிவிடி என்பது கணினியின் செயற்பாட்டை ஆரம்பிக்கக் கூடியவாறு தன்னகத்தே ஒரு இயங்கு தளத்தைக்கொண்ட ஒரு சீடி அல்லது டிவிடியைக் குறிக்கிறது. கணினியில் தற்போது நிறுவியுள்ள இயங்கு தளத்திலோ அல்லது ஹாட் டிஸ்கிலோ எந்த மாற்றமோ பாதிப்போ ஏற்படாதவாறு புதியதோர் இயங்கு தளத்தைப் பயன்படுத்திப் பார்க்கக்கூடிய வசதியை அளிக்கிறது லைவ் சீடி. ஒரு லைவ் சீடியை சீடி ரொம் ட்ரைவில் அடையாளம் காணும் கணினி ஏற்கனவே நிறுவியுள்ள இயங்கு தளத்திற்குப் பதிலாக சீடியிலுள்ள இயங்குதளத்திலேயே கணினி பூட் செய்ய ஆரம்பிக்கும். லைவ் சீடியிலிருந்து கணினி இயங்க ஆரம்பித்தும் எமது விருப்பப்படி கணினியில் வலம்வர முடியும். அதிலிருந்தே மீண்டும் கணினியில் நிறுவியுள்ள இயங்கு தளத்திற்குத் திரும்ப வேண்டுமானால் சீடி ட்ரைவிலிருந்து லைவ் சீடியை அகற்றி விட்டு கணினியை மறுபடி இயக்க வேண்டும். லைவ் சீடி எமக்குப் பல வழிகளில் பயன்படுகிறது. ஒரு புதிய இயங்குதளம் ஒன்றைக் கணினியில் நிறுவ ஹாட் டிஸ்கில் இடம் ஒதுக்கவோ அல்லது அதற்கு நேரத்தைச் செலவிட வேண்டிய அவசியமோ இல்லை. அதனை கணினியில் நிறுவாமலேயே இயக்கிப் பார்க்கக் கூடிய வசதியைத் தருகிறது... லைவ் சீடி ஹாட்டிஸ்கில் நிறுவியிருக்கும் இயங்குதளம் செயற்பட மறுக்கும் போது ஒரு லைவ் சீடியை பயன்படுத்தி எமது பணிகளை மேற்கொள்ள முடிகிறது. குறிப்பாக உபுண்டு போன்ற லினக்ஸ் இயங்கு தளத்தின் பல பதிப்புகள் word processor, spreadsheet program, graphics editor, web browser போன்ற பல்வேறு பயன்பாட்டு மென்பொருள்களையும் தன்னகத்தே கொண்டுள்ளன. இதன் மூலம் கணினிப் பயனர்கள் ஒரு லைவ் சீடியை எந்தவொரு கணினியில் இட்டும் ஏற்கனவே நிறுவியுள்ள இயங்கு தளத்திற்குப் பாதிப்புகள் வராமல் தமது பணிகளை மேற்கொள்ள முடியும். லைவ் சீடியை ட்ரைவிலிட்டதும் கணினி பூட் ஆகாமல் மறுபடியும் ஹாட்டிஸ்கிலிருந்தே இயங்க ஆரம்பித்தால் BIOS இல் மாற்றம் செய்துகொள்ள வேண்டும். இதற்கு நீங்கள் கணினி பூட் ஆக ஆரம்பிக்கும் போதே டெல் விசையை அழுத்தி பயோஸ் செட்டப்பில் நுளைய வேண்டும். (எனினும் இது கணினிக்குக் கணினி வேறுபடலாம்) அங்கு கணினியிலுள்ள பூட் சாதனங்கள் பட்டியலில் சீடி ட்ரைவை முதல் பூட் சாதனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். பயோஸில் செய்யும் இந்த மாற்றத்தை கணினியில் சிக்கலை ஏற்படுத்தாதவாறு சேமித்துக்கொள்ள முடியும். ஒரு லைவ் சீடி ட்ரைவில் இல்லாத போது கணினி ஹாட் டிஸ்கிலிருந்தே பூட் ஆக ஆரம்பிக்கும். அனேகமாக லினக்ஸ் இயங்கு தளத்தின் பல்வேறு பதிப்புகள் லைவ் சீடி வடிவில் கிடைக்கின்றன. இவற்றை இணையத்திலிருந்து இலவசமாக டவுன்லோட் செய்துகொள்ள முடியும். அல்லது இந்த சீடிக்களை தபாலில் இலவமாக வரவழைத்துக்கொள்ளவும் முடியும். லினக்ஸ் தவிர Mac Os, Windows, sunjava Desktop. OpenBSD எனப் பல்வேறு இயங்கு தளங்கள் லைவ் சீடி வடிவில் கிடைக்கின்றன. இவற்றுள் ஏதோவொரு லைவ் சீடியைக் கைவசம் வைத்திருப்பது ஹாட் டிஸ்கில் இருந்து கணினி பூட் ஆக மறுக்கும் சந்தர்ப்பங்களில் நமக்குப் பபயன்படக் கூடும்.

Related

கணிணிக்குறிப்புக்கள் 7170415404623187593

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item