காரட் அப்பம் : சமையல் குறிப்புகள்
காரட் அப்பம் : தேவையானவை : துருவிய காரட் 3 கப், உளுத்தம் பருப்பு 200கிராம், சர்க்கரை 100 கிராம், முந்திரிப்பருப்பு 25கிராம், திராட்சை 25 க...
https://pettagum.blogspot.com/2011/09/blog-post_354.html
காரட் அப்பம் :
தேவையானவை :
துருவிய காரட் 3 கப், உளுத்தம் பருப்பு 200கிராம், சர்க்கரை 100 கிராம், முந்திரிப்பருப்பு 25கிராம், திராட்சை 25 கிராம், சோடா உப்பு 1 சிட்டிகை, டால்டா 250 கிராம் தேங்காய் துருவல் 1கப்
செய்முறை :
உளுத்தம் பருப்பை ஊற வைக்கவும். முந்திரிப்பருப்பு, திராட்சை இரண்டையும் வாணலியில் சிறிது நெய் விட்டு பொன்நிறமாக வறுக்கவும். உளுத்தம் பருப்பை களைந்து தண்ணீர் விட்டு கெட்டியாக அரைக்கவும். நைசானதும் சர்க்கரை, முந்திரிப்பருப்பு, திராட்சை மூன்றையும் போட்டு அரைத்து எடுக்கவும்.
அரைத்த மாவுடன் சோடா உப்பு, காரட் துருவல், தேங்காய் துருவல், போட்டு பிசைந்து வாணலியில் நெய் விட்டு காய்ந்ததும் அப்பம் ஊற்றி பொன்னிறமானதும் எடுத்துவிடவும். சுவையாக மிருதுவாக இருக்கும் காரட் அப்பத்தை சிறுவர்கள் முதல் பொ¢யவர்கள் வரை மிகவும் விரும்பி உண்பார்கள் செய்வது மிக எளிது.
Post a Comment