பூண்டு சட்னி--சமையல் குறிப்புகள்
பூண்டு சட்னி தேவையான அளவு பூண்டு எடுத்துக் கொண்டு, தண்ணீர் விடாமல் மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். கடாயில் சற்று அதிகமாக எண்ணெய் விட்டு, ...
https://pettagum.blogspot.com/2011/09/blog-post_8465.html
பூண்டு சட்னி
தேவையான அளவு பூண்டு எடுத்துக் கொண்டு, தண்ணீர் விடாமல் மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். கடாயில் சற்று அதிகமாக எண்ணெய் விட்டு, கடுகு, கறிவேப்பிலை தாளிக்கவும். கொத்தமல்லி தழை, பொடித்து வைத்திருக்கும் பூண்டு ஆகியவற்றை சேர்க்கவும் (பூண்டு மூழ்கும் அளவுக்கு எண்ணெய் ஊற்றுவது அவசியம்). தேவையான மிளகாய்த்தூள், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக வதக்கி இறக்கவும். இது, இட்லி மற்றும் தோசைக்கு நன்றாக இருககும்.
கமென்ட்: வதக்கும்போது ஒரு டேபிள்ஸ்பூன் கெட்டியான புளிக் கரைசல் சேர்த்தால்... மிளகாய்த்தூள் மற்றும் பூண்டு ஆகியவற்றின் காரத் தன்மையைக் குறைத்து, ருசியைக் கூட்டும்.
Post a Comment