தேங்காய் முறுக்கு : சமையல் குறிப்புகள்
தேங்காய் முறுக்கு : தேவையானவை : புழுங்கல் அரிசி 1படி, வெள்ளை உளுந்து 1/4 படி, தேங்காய் 1, எள் 50கிராம், பெருங்காயம் சிறு துண்டு, உப்பு தேவ...
https://pettagum.blogspot.com/2011/09/blog-post_4317.html
தேங்காய் முறுக்கு :
தேவையானவை :
புழுங்கல் அரிசி 1படி, வெள்ளை உளுந்து 1/4 படி, தேங்காய் 1, எள் 50கிராம், பெருங்காயம் சிறு துண்டு, உப்பு தேவைக்கேற்ப, எண்ணெய் தேவைக்கேற்ப,
செய்முறை :
அரிசியுடன் உளுந்தை சற்று சிவக்க வறுத்த மிசினில் அரைத்து கொள்ளவும். தேங்காயை துருவி பால் எடுத்து அதில் உப்பு, பெருங்காயம் கரைத்து எள் சேர்த்து மாவில் ஊற்றி முறுக்கு மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். பின்பு மாவை தேன்குழல் அச்சில் இட்டு முறுக்குகளாக பிழிந்து எண்ணெயில் போட்டு வெந்ததும் எடுக்கவும். இதுவே தேங்காய் பால் தேன்குழல். பண்டிகை நாளில் செய்து கொடுத்தால் சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவர்.
Post a Comment