மலபார் மீன் குழம்பு--சமையல் குறிப்புகள்
மலபார் மீன் குழம்பு தேவையானவை கடல் மீன் - 1/2 கிலோ வெங்காயம் - 200 கிராம் தக்காளி - 200 கிராம் மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன் தனியாத்தூள் - 2 ட...
https://pettagum.blogspot.com/2011/09/blog-post_9991.html
மலபார் மீன் குழம்பு
தேவையானவை
கடல் மீன் - 1/2 கிலோ
வெங்காயம் - 200 கிராம்
தக்காளி - 200 கிராம்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
தனியாத்தூள் - 2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
தேங்காய் எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி
அரைக்க
தேங்காய் - 1 மூடி
சீரகம் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
தாளிக்க
சீரகம், கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை
* மீனைச் சுத்தம் செய்து துண்டுகளாக்கவும்.
* ஒரு சட்டியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும்.
* தொடர்ந்து வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.
* பிறகு மஞ்சள்தூள், தனியாத்தூள், மிளகாய்த் தூள், அரைத்த மசாலா, தேவைக்கேற்ப உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்.
* கொதிக்கும்போது மீனை ஒவ்வொன்றாக எடுத்துப் போடவும். மீன் வெந்த பிறகு குழம்பை இறக்கிவிடவும்.
குறிப்பு
* இந்த கேரள மீன் குழம்பிற்கு தேங்காய் எண்ணெய், தேங்காய் மசாலா சேர்ப்பதால் தனி ருசி உண்டு.
Post a Comment