கீரை டிப்ஸ்...உங்களுக்கு மேலும் உதவுவதற்காக...

கீரை ! டாக்டரிடம் எதற்காக போய் நின்றாலும், 'சாப்பாட்டுல நிறைய கீரையைச் சேர்த்துக்கோங்க...' என்ற அட்வைஸே முதல் வந்து விழுவதால்... உ...

கீரை ! டாக்டரிடம் எதற்காக போய் நின்றாலும், 'சாப்பாட்டுல நிறைய கீரையைச் சேர்த்துக்கோங்க...' என்ற அட்வைஸே முதல் வந்து விழுவதால்... உடம்புக்கு குளிர்ச்சியையும், சத்துக்களையும் சகட்டு மேனிக்கு அள்ளித் தரும் கீரைகளைப் பற்றி நம்மவர்களுக்கு சந்தேகமே இல்லை. உங்களுக்கு மேலும் உதவுவதற்காக... கீரை டிப்ஸ்... வல்லாரைக் கீரை சாப்பிடுவதால் ஞாபகசக்தி அதிகரிக்கும் என்பது உண்மையே. அதற்காக, அள்ளி வைத்துக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தால்... தலைவ, மயக்கம் என்று படுத்த ஆரம்பித்துவிடும் ஜாக்கிரதை! புளிச்சக்கீரை குடலுக்கு வலுவூட்டக்கூடியது. இதில் துவையல் செய்து சாப்பிட்டால், வயிற்றுப் புண், வயிற்றுக் கடுப்பு ஆகியவை குணமாகும். கீரைகளில் மசியல், கூட்டு செய்யும்போது பயத்தம்பருப்பை சேர்த்துச் செய்ய வேண்டும். இது சுவையைக் கூட்டுவதோடு... உடலுக்குச் சத்தையும், குளிர்ச்சியையும் தந்து தெம்பும் ஊட்டும். பாலக்கீரையில் அதிகமாக இரும்புச்சத்து இருக்கிறது. இந்தக் கீரையில் உப்பு சேர்த்து லேசாக வேக வைத்து, மிக்ஸியில் அரைத்து... கடுகு, காய்ந்த மிளகாய் தாளித்து, சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். மலச்சிக்கலை போக்கி, உடம்பைப் புத்துணர்ச்சியாக வைக்கும். வயிற்றில் இருக்கும் அதிகப்படியான சதையை (தொப்பை) குறைக்கச் செய்யும் குணம் பசலைக்கீரைக்கு உண்டு. லேசாக வேக வைத்து பொரியல் செய்துகூட சாப்பிடலாம். மணத்தக்காளிக் காய்களை உப்பு, மோரில் பிசிறி வெயில் காய வைத்து, எண்ணெயில் பொரித்து, சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். வாய்ப் புண், வயிற்றுப் புண் ஆகியவை குணமாகும். இரவு வேளையில் கீரை சமைத்து சாப்பிடக்கூடாது என்பார்கள். சரிவர ஜீரணமாகாமல் பிரச்னையை ஏற்படுத்தும் என்பதுதான் காரணம். சிறுகீரை என்று பெயர் சூட்டப்பட்டிருந்தாலும், அது தரும் பலன்கள் பெரிதுதான். மிளகு, சீரகம், சோம்பு, தக்காளி, வெங்காயம் இவற்றோடு சிறுகீரையைச் சேர்த்து வேக வைத்து, சிறிது பருப்பையும் சேர்த்துக் கடைந்து சாப்பிட்டால்... பித்தம், நீர்க்கடுப்பு, கை, கால் வீக்கம் குறையும். சர்க்கரை நோயாளிகள் இந்தக் கீரையை தினமும் சாப்பிட்டு வந்தால், இன்சுன் இயல்பாக சுரக்கவும் வாய்ப்பு ஏற்படும். எந்தக் கீரையானாலும் துவையல் செய்தே சாப்பிடலாம். கீரையை நிறம் மாறாமல் நன்றாக வதக்கவும். உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், 2 பூண்டு பல், புளி, உப்பு சேர்த்து சிறிது எண்ணெயில் தனியாக வறுக்கவும். பிறகு, வதக்கிய கீரையுடன் சேர்த்து அரைத்தால் துவையல் தயார். இதைச் சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். ருசியாக இருப்பதோடு, சத்துக்களும் அப்படியே உடல் சேரும். ஒரு வரியில் கீரைகளின் மருத்துவ குணங்கள் நாம் அன்றாடம் உபயோகிக்கும் கீரைகளின் மருத்துவ குணங்கள் 1. அகத்தி கீரை ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளிய வைக்கும்.* 2. காசினிக் கீரை சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். சூடு தணிக்கும்.* 3. சிறு பசலைக் கீரை சரும நோய்களைத் தீர்க்கும் பால்வினை நோயை குறைக்கும். 4. பசலைக் கீரை தசைகளை பல மடையச் செய்யும்.* 5. கொடி பசலைக் கீரை வெள்ளை விலக்கும் நீர் கடுப்பை நீக்கும்.* 6. மஞ்சள் கரிசலை கல்லீரலை பல மாக்கும். காமாலையை விலக்கும்.* 7. குப்பை கீரை பசியைத் தூண்டும். வீக்கம் வத்தவைக்கும்.* 8. அரைக்கீரை ஆண்மை பெருக்கும்.* 9. புளியங்கீரை சோகையை விலக்கும். கண் நோய் சரியாக்கும்.* 10. பிண்ணாக்கு கீரை வெட்டையை, நீர் கடுப்பை நீக்கும்.* 11. பரட்டைக் கீரை பித்தம், கபம், நோய்களை விலக்கும்.* 12. பொன்னாங்கன்னி மேனி அழகையும், கண் ஒளியை அதிகரிக்கும்.* 13. சீமைப்பொன்னாங்கன்னி மேனியை மினு மினுப்பாக்கும்.* 14. சுக்கா கீரை ரத்த அழுத்தத்தை சீர் செய்யும். சிரங்கு மூலத்தை போக்கும்.* 15. வெள்ளை கரிசலைக்கீரை ரத்த சோகையை நீக்கும்.* 16. முருங்கைக் கீரை நீரிழிவை நீக்கும். கண்கள் உடல் பலம் பெறும்.* 17. வல்லாரை மூளைக்கு பலம் தரும்.* 18. முடக்கத்தான் கீரை கை, கால் முடக்கம் நீக்கும். வாயு விலகும்.* 19. புண்ணக் கீரை சிரங்கும், சீதளமும் விலக்கும். 20. புதினாக் கீரை ரத்தம் சுத்தி செய்யும். அஜீரணம் அகற்றும்.* 21. நஞ்சு முண்டான் கீரை விஷம் முறிக்கும்.* 22. தும்பை அசதி, சோம்பல் நீக்கும்.* 23. கல்யாண முருங்கை கீரை சளி, இருமலை துளைத்தெறியும்.* 24. முள்ளங்கிகீரை நீரடைப்பு நீக்கும். 25. பருப்பு கீரை பித்தம் விலக்கும். உடல் சூட்டை தணிக்கும்.* 26. புளிச்ச கீரை கல்லீரலை பலமாக்கும். மாலைக்கண் நோயை விலக்கும். ஆண்மை பலம் தரும்.* 27. மணலிக்கீரை வாதத்தை விலக்கும். கபத்தை கரைக்கும்.* 28. மணத்தக்காளி கீரை வாய், வயிற்றுப்புண் குணமாக்கும். தேமல் அகலும்.* 29. முளைக் கீரை பசியை ஏற்படுத்தும். நரம்பு பலமடையும்.* 30. சக்கரவர்த்தி கீரை தாது விருத்தியாகும்.* 31. வெந்தயக் கீரை மலச்சிக்கலை நீக்கும். மண்ணீரல், கல்லீரலை பலமாக்கும். வாத, காச நோய்களை விலக்கும்.* 32. தூதுவளை ஆண்மை தரும் சரும நோய் விலக்கும். சளி நீக்கும்.* 33. தவசிக் கீரை இருமலை போக்கும்.* 34. சாணக் கீரை காயம் ஆற்றும். 35. வெள்ளைக் கீரை தாய்ப்பாலை பெருக்கும்.* 36. விழுதிக் கீரை பசியைத் தூண்டும்.* 37. கொடி காசினி பித்தம் தணிக்கும்.* 38. வேலைக் கீரை தலைவலியை போக்கும்.* 39. துயிளிக் கீரை வெள்ளை வெட்டை விலக்கும்.* 40. துத்திக் கீரை வாய், வயிற்றுப்புண் அகற்றும். வெள்ளை மூலம் விலக்கும்.* 41. கார கொட்டிக்கீரை மூலநோயை போக்கும். சீதபேதியை நிறுத்தும்.* 42. மூக்கு தட்டை கீரை சளியை அகற்றும்.* 43. நருதாளி கீரை ஆண்மையை பெருக்கும். வாய்ப்புண் அகற்றும். *** மேலே குறிப்பிட்ட சில கீரை வகைகளில் அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால் உடலுக்கு சிறு தீங்கு விளைவிப்பவைக்கு உதாரணம், 44. அகத்தி கீரை மருந்து சக்தியை முறியடிக்கும். 45. பிண்ணாக்கு கீரை வாத கரப்பான் வரும்.

Related

மூலிகைகள் கீரைகள் 4110271129715798103

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item