'ஸ்லிம்' இடுப்புக்கு சிம்பிள் பயிற்சிகள் ! ஹெல்த் ஸ்பெஷல்

'ஸ்லிம்' இடுப்புக்கு சிம்பிள் பயிற்சிகள் ! பருத்த இடை, பெருத்த வயிறு என அலுங்கிக் குலுங்கி நடந்துவரும் பெண்களின் எண்ணிக்கை, இப்போத...

'ஸ்லிம்' இடுப்புக்கு சிம்பிள் பயிற்சிகள் ! பருத்த இடை, பெருத்த வயிறு என அலுங்கிக் குலுங்கி நடந்துவரும் பெண்களின் எண்ணிக்கை, இப்போதெல்லாம் அதி கரித்துக் கொண்டே இருக் கிறது. இலக்கியங்களில் சொல்லப்படும் 'கொடி யிடை’ என்பது கனவாகிக் கொண்டே வருகிறது. 'கொடியிடை' என்பது... அழகின் அடையாளம் என்பதைவிட, ஆரோக் கியத்தின் அடையாளம் என்பதுதானேஉண்மை. எனவே, அத்தகைய இடையை நாமெல்லாம் பெற வேண்டாமா?! ''உணவுப் பழக்கங்களும் வாழ்வியல் முறைகளும்தான் கொடி இடை, தடி இடையாக மாறக் காரணம். உணவு மற்றும் உடற்பயிற்சிகளை சரிவர தொடர்ந்தால்... கொடி இடை நிச்சயமே!'' என்று நம்பிக்கையூட்டுகிறார் சென்னையைச் சேர்ந்த ஃபிசியோதெரபிஸ்ட் ராதா பாலச்சந்தர். ''இடுப்புப் பகுதியில், தோலுக்கு அடியில் 'சப்ஜடேனியஸ்' எனும் கொழுப்பு இருக்கிறது. இடுப்புப் பகுதிக்கு எந்த வேலையும் கொடுக்காதபோது, இக்கொழுப்பானது கரையாமல் தங்கி, இடுப்புச் சதைப் பகுதி பெருத்துப் போவதற்குக் காரணமாகிவிடுகிறது. இதைத்தவிர, மரபு ரீதியாக வும் இடுப்பு பருமன் ஏற்பட வாய்ப்பு உண்டு. பிரசவத்துக்குப் பிறகு, சில பெண்களுக்கு ஏற்படும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் மாற்றங்களாலும் தடதடவென இடுப்பில் சதை போட்டுவிடும். சிறிது கவனம் எடுத்துக் கொண்டாலே போதும்... இந்தப் பிரச் னைக்கு முடிவு கட்டிவிடலாம்!'' என்று சொல்லும் ராதா பாலச்சந்தர், இடுப்புச் சதையைக் குறைப்பதற்கான உடற்பயிற்சி முறைகளை வரிசையாக அடுக்கினார். தரையில் வலது பக்கமாக சாய்ந்து படுத்துக்கொண்டு, இடது காலை மேலே தூக்கவும். சில விநாடிகள் கழித்து கீழே இறக்கிவிட்டு, இடது பக்கமாகப் படுத்து, வலது காலை மேலே தூக்கவும். இப்படி மாற்றி மாற்றி 10 தடவை செய்யவேண்டும். தினமும் இதைச் செய்து வந்தால் இடுப்பு சதைக்கான வேலை துரிதப்படும். தேவையற்ற கொழுப்பு கரைந்துவிடும். ஒரு சேரில் அமர்ந்திருப்பது போன்ற நிலையில் உடலை நிறுத்திக்கொண்டு, இரண்டு கைகளையும் நேராக நீட்டியபடி, எழுந்து எழுந்து உட்காரவும். இந்தப் பயிற்சி, கொழுப்பைக் கரைய வைத்து, ரத்த ஓட்டத்தை சீராக்க உதவும். தரையில் மல்லாந்து படுத்துக் கொண்டு, இடது காலை மட்டும் மடக்கி, அப்படியே வலது பக்கமாக சாய்ந்து படுக்கவும். சில விநாடிகள் கழித்து, மடக்கிய காலை நீட்டி, வலது காலை மடக்கவும். இப்படி ஐந்து தடவை செய்த பிறகு, இரண்டு கால்களையும் மடக்கியபடியே இடதுபக்கமாக சாய்ந்து படுத்து, முன்பு செய்தது போலவே ஒவ்வொரு காலையும் மாற்றி மாற்றி மடக்கவும். இதையும் ஐந்து தடவை செய்யவும். இப்படி தினமும் செய்வதால், இடுப்பின் அமைப்பு கட்டுக்கோப்பாக இருக்கும். இடுப்பை 'சிக்’கென்று வைத்துக் கொள்ள ராதா பாலச்சந்தர் சொல்லும் உணவு முறைகள்... காலையில் டீ, காபி குடிப்பதைத் தவிர்த்து, சுடு தண்ணீரில் எலுமிச்சைச் சாறு மற்றும் தேன் கலந்து குடிக்கலாம். பூசணிக்காய், வாழைத்தண்டு இவற்றுக்கெல்லாம் கெட்ட நீரை வெளியேற்றும் தன்மை அதிகம். எனவே, ஒரு நாள் வாழைத் தண்டு சாறு, மறுநாள் பூசணிக்காய் சாறு என்று மாற்றி மாற்றி வெறும் வயிற்றில் அருந்தலாம். நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களைச் சாப்பிடலாம். எண்ணெயில் பொரித்த உணவுகளை அறவே தவிர்க்கலாம். வேக வைத்த உணவுகளைச் சாப்பிடுவது நல்லது. நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளை அதிக அளவு சேர்த்துக் கொள்ளலாம். அதிக கலோரி உள்ள உணவுப் பொருட்களைத் தொடவே வேண்டாம். நொறுக்குத் தீனி ஆசையைத் தடுக்க முடியாவிட்டால்... அவல், அரிசிப்பொரி, காய்கறி சாலட் சாப்பிடலாம். சாப்பிட்டு முடித்தவுடன் 10 நிமிடங்கள் கழித்து சுடுதண்ணீர் அருந்தலாம். தினமும் உணவில் 2 டீஸ்பூன் 'கொள்ளு’ சேர்ப்பது, உடலில் அதிக கொழுப்பு சேர விடாமல் தடுக்கும். டி.வி பார்த்துக் கொண்டே சாப்பிடுவது கூடாது. இதனால், சாப்பாட்டின் அளவு தெரியாமல் போய்விடும். தினமும் ஒரு சிறிய வெங்காயத்தைப் பச்சையாக சாப்பிடுவது, ரத்தத்தில் தங்கியிருக்கும் கொழுப்பை சரிசெய்துவிடும். எப்போதும் உணவை மென்று சாப்பிடவும். சோடா கலந்த குளிர்பானங்கள் குடிப்பதைத் தவிர்க்கவும். வாயுத் தொல்லை அதிகமானால் இடுப்பு எடையும் அதிகமாகும்.

Related

குண்டு பூசணியா நீங்கள்?இஞ்சி சாறும், பப்பாளி காயும்இருக்கையில் எதற்கு அச்சம்! உணவே மருந்து!!

குண்டு பூசணியா நீங்கள்?இஞ்சி சாறும், பப்பாளி காயும்இருக்கையில் எதற்கு அச்சம்! இன்றைய சூழலில், உடல் பருமன் ஒரு வகையான வியாதி. அதுமட்டுமல்ல, எல்லா வகையான வியாதிகளுக்கும், அதுவே வாசல். நா...

தயிர்... உயிர் காக்கும் ஆரோக்கியக் கூறுகள் அடங்கிய உணவுப்பொருள்! உணவே மருந்து!!

தயிர் தயிர்... உயிர் காக்கும் ஆரோக்கியக் கூறுகள் அடங்கிய உணவுப்பொருள். புரோபயாடிக் நிறைந்த தயிரில் துத்தநாகம், வைட்டமின் இ, பாஸ்பரஸ் ஆகியவை இருக்கின்றன. உள்ளே... கெட்டித் தயிரைச் சாப்பிட்ட...

பாதத்தைக் கவனிக்காவிட்டால் பாதகம் தான்! ஹெல்த் ஸ்பெஷல்!!

பாதத்தைக் கவனிக்காவிட்டால் பாதகம் தான்! பெடிக்யூர் பெஸ்ட் முகத்துக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை யாரும் பாதங்களுக்குத் தருவது இில்லை. ஆனால் பாதங்களைக் கவனிக்காவிட்டால், உடல் நலத்துக்குப் பாதக...

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

Wednesday - Nov 27, 2024 10:25:51 AM

No. of Posts

8665 Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

16,087,222

Advertisement

Contributors

Popular PostsBlog Archive

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item