சிம்பிலி! சமையல் குறிப்புகள்
சிம்பிலி! தேவையான பொருட்கள்: கேழ்வரகு மாவு - 1 கப் கறுப்பு எள் - அரை கப் வெல்லம் - ஒன்றரை கப் நெய் - 1 மேஜைக்கரண்டி செய்முறை: கேழ்வரகு ம...
https://pettagum.blogspot.com/2011/09/blog-post_7984.html
சிம்பிலி!
தேவையான பொருட்கள்:
கேழ்வரகு மாவு - 1 கப்
கறுப்பு எள் - அரை கப்
வெல்லம் - ஒன்றரை கப்
நெய் - 1 மேஜைக்கரண்டி
செய்முறை:
கேழ்வரகு மாவில் சிறிது தண்ணீர் தெளித்து, பிசிறி, ஈரப்பதம் வந்ததும் ஆவியில் வேக விடுங்கள். எள்ளைக் கழுவி, கல் நீக்கி, தண்ணீர் வடித்து, ஈரத்துடனேயே வறுத்தால், நன்கு பொரிந்து வரும். வாசம் வரும் வரை வறுத்த எள், வேக வைத்த மாவு, வெல்லம் மூன்றையும் ஒன்றாக ஆட்டு உரலில் போட்டு இடியுங்கள். அந்த வசதி இல்லாதவர்கள், மிக்சியில் வைப்பர் பிளேடு போட்டு, எல்லாப் பொருட்களையும் சேர்த்து, இரண்டு சுற்று சுற்றுங்கள்.மூன்றும் சேர்ந்து வரும் போது எடுத்து, நெய்யையும் சேர்த்து, சிறு உருண்டைகளாகப் பிடியுங்கள்.
Post a Comment