குறட்டை விடுவது ஆபத்தின் அறிகுறியா ? குறட்டையை தவிர்க்க மூச்சுப் பயிற்சி மிகச் சிறந்தது

குறட்டை விடுவது ஆபத்தின் அறிகுறியா ? குறட்டையை தவிர்க்க மூச்சுப் பயிற்சி மிகச் சிறந்தது ஒருவர் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் போது, பலமான கு...

குறட்டை விடுவது ஆபத்தின் அறிகுறியா ? குறட்டையை தவிர்க்க மூச்சுப் பயிற்சி மிகச் சிறந்தது ஒருவர் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் போது, பலமான குறட்டை சத்தம் கேட்கும். ஆனால், அது அவருக்குக் கேட்காது. மற்றவர்களை இம்சைப்படுத்தும். 'நீ குறட்டை விடுகிறாய்' என்று அவரிடம் சொன்னால், அதையும் உடனே மறுப்பார். எல்லா வீடுகளிலும் இந்தப் பிரச்னை உண்டு. நாம் தூங்கும் போது, லேசான தூக்கத்தில் துவங்கி, ஆழ்ந்த தூக்கத்திற்குச் செல்கிறோம். இப்படி தூங்கும் போது, வாயின் மேல் பகுதியில் உள்ள தசைகளும், தொண்டைப் பகுதியும் ஓய்வு எடுத்துக் கொள்ளும் வகையில், தளர்ந்து விடும். அப்போது, மூச்சுக் குழாயில் தற்காலிக அடைப்பு ஏற்படுகிறது. மூச்சு வெளியேறும் போது, இந்த அடைப்பை மீறி காற்று வெளியேறுவதால், விதவிதமான ஒலிகளை எழுப்புகிறது. இது தான் குறட்டைச் சத்தமாக நமக்கு கேட்கிறது. டான்சில் வீக்கம், அடினாய்டு பிரச்னைகள் ஏற்படும் போதோ, சளி பிடிக்கும் போதோ குறட்டை சத்தம் ஏற்படலாம். இந்தப் பிரச்னைகளால் ஏற்படும் அடைப்பு நீங்கியவுடன், குறட்டை சத்தமும் நின்று விடும். அதிக உடல் எடை கொண்ட குழந்தைகள் மற்றும் இள வயதினருக்கு குறட்டை ஏற்படுகிறது. கழுத்தைச் சுற்றி, அளவுக்கு அதிகமாக தசை வளர்வதால், சதை அடைப்பு உருவாகி, குறட்டை ஏற்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன் வரை, குறட்டை விடுபவர்களை கிண்டல் செய்பவர்கள் அதிகம். குறட்டை ஏற்படுத்தும் குழந்தைகள் தொந்தரவு ஏற்படுத்துபவர்களாகக் கருதப்பட்டனர். இப்போது நிலைமை முற்றிலும் மாறி விட்டது. ஆபத்தான மருத்துவக் கோளாறாக இது கருதப்படுகிறது. ஆபத்தான, தூக்கத் தடை ஏற்படுத்தும் நோயாக இது கருதப்படுகிறது. ஆழ்ந்த தூக்க நிலைக்குச் செல்லும் போது, நம் கண்கள் வேகமாக அசையும். அந்த நேரத்தில் நம் மூச்சுக் காற்றும் வேகமாக உள் சென்று, வெளியேறும். இதற்கு, 'அப்ஸ்ட்ரக்டிவ் ஸ்லீப் அப்னியே’ என்று பெயர். அந்த நேரத்தில் குறட்டையும் அதிகரிக்கும். ஒரு மணி நேரத்திற்கு, 15க்கும் மேற்பட்ட முறை, நம் கண்கள் வேகமாக அசைந்து, மூச்சுக் காற்றும் வேகமாக உள் சென்று வெளி வருகிறது. குறட்டை விடும் போது திடீரென நின்று, திடீரென அதிகரிக்கும் சுவாசத்தால், நம் உடலில் ரத்த அழுத்தம் அதிகரித்து, இதய அடைப்பு, திடீர் மரணம் ஆகியவை ஏற்படலாம். 'அப்ஸ்ட்ரக்டிவ் ஸ்லீப் அப்னியே’ ஏற்படுவதற்கான அறிகுறிகள்: அதிக சத்தம் கொண்ட குறட்டை, பகல் நேரத்தில் மயக்கமாக இருத்தல், இரவில் வியர்த்தல், காலையில் எழுந்ததும் தலைவலி. சாதாரண மயக்க நிலைக்கும், சோர்வுக்கும், குறட்டைக்கும் இது போன்ற ஆபத்தான உபாதைக்கும் 'எப்ஒர்த்’ என்ற முறையில், வித்தியாசம் கண்டுபிடிக்கலாம். கீழே உள்ள கேள்விக்கான பதில்களுக்கு, 0, 1, 2, 3 என மதிப்பெண்கள் கொடுங்கள். உங்களுக்கு ஏற்பட்டுள்ளது எந்த மாதிரியான உபாதை எனக் கண்டுபிடித்து விடலாம். (0' எப்போதும் இல்லை, 1 ' குறைந்த அளவு வாய்ப்பு, 2 ' போதுமான அளவு வாய்ப்பு, 3 ' அதிக அளவு வாய்ப்பு). 1. எப்போதெல்லாம் தூக்கம் வருகிறது? அ) 'டிவி’ பார்க்கும் போது. ஆ) 'மீட்டிங்’கில் உட்கார்ந்திருக்கும் போது. இ) தொடர்ந்து ஒரு மணி நேரம் காரில் பயணிக்கும் போது. ஈ) மதிய நேரத்தில் படுக்கும் போது. உ) மதிய உணவுக்குப் பின், சும்மா அமர்ந்திருக்கும் போது. ஊ) நீங்கள் அமர்ந்திருக்கும் கார், 'டிராபிக் சிக்னலில்’ நிற்கும் போது. மேலே உள்ள பதில்களுக்கு மதிப்பெண் கொடுத்து விட்டீர்களா? இந்த மதிப்பெண்களைக் கூட்டும் போது விடை, 1 முதல் 9 வரை வந்தால், உங்களுக்கு இந்த நோய் ஏற்படவில்லை எனக் கொள்ளலாம். 12 முதல் 16 வரை விடை வந்தால், இந்த நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளீர்கள் எனக் கொள்ளலாம். இந்தியர்களில் பெரும்பாலோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், திடீர் மரணம் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது. நம் வாழ்க்கை முறை மாறி விட்டதால், இந்த நிலை ஏற்பட்டுள்ளது. நம் பொருளாதார நிலை, மிக அதிக வளர்ச்சி கண்டுள்ளது. பன்னாட்டு நிறுவனங்கள் எம்.பி.ஏ., பட்டதாரிகளையும், மற்ற பட்டதாரிகளையும் பணிக்கு அமர்த்தி, கற்பனை செய்ய இயலாத அளவு சம்பளம் கொடுக்கிறது.சொந்த தொழில் செய்பவர்கள், பொதுத் துறை ஊழியர்கள், இலக்கை எட்ட கடுமையாக உழைக்க வேண்டி உள்ளது. இந்த புதிய வாழ்க்கை முறையால் ஏற்படும் நோய்களால் நாம் பாதிக்கப்பட்டுள்ளோம். கவலை, மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள உயரதிகாரிகள், சாதாரண வாழ்க்கையை வாழ முடியாமல் தவிக்கின்றனர். உடற்பயிற்சி செய்ய அவர்களுக்கு நேரமே இல்லை. பள்ளிகளில் குழந்தைகள் விளையாட ஊக்குவிப்பதில்லை. மாலை நேரங்களில், 'டிவி’ பார்க்கவே நேரம் சரியாகி விடுகிறது. உடல் பருமன் அதிகரித்த நிலை, தொற்று நோய் போல பரவி விட்டது. குறட்டை ஏற்படுவதற்கான காரணத்தை அறிந்து, 'ஸ்லீப் அப்னியே’ நோய் உருவாகி உள்ளதா என்பதைக் கண்டுபிடிக்க, தமிழகத்தின் பெரிய நகரங்களில் மருத்துவமனைகள் உள்ளன. சற்று அதிக கட்டணம் வசூலித்தாலும், உங்கள் தூக்க முறையை வைத்து, உங்களுக்கு நோய் உள்ளதா என்பதை, அவர்கள் கண்டறிந்து விடுவர். காரணத்தைக் கண்டறிந்து விட்டால், 30 சதவீதத்தினர் நோயைக் குணப்படுத்திக் கொள்ளலாம். டான்சில், அடினாய்டு, மூக்கினுள் வீக்கம் போன்ற பிரச்னைகளை, அறுவை சிகிச்சை மூலம் சரி செய்து கொள்ளலாம். ஆல்கஹால் அருந்துபவர்கள், போதை மருந்து சாப்பிடுபவர்களின் மூளையில், மூச்சு மையம் பாதிக்கப்படுவதால், அவர்களுக்கு இந்த நோய் ஏற்படலாம். தங்கள் பழக்கத்தை அவர்கள் நிறுத்தி விட்டால், குறட்டை, 'ஸ்லீப் அப்னியே’ நோயிலிருந்து மீண்டு விடலாம். மீதமுள்ள 70 சதவீதத்தினர், உடல் பயிற்சி மற்றும் சீரான உணவு முறை ஆகியவற்றை மேற்கொண்டு, உடல் பருமனைக் குறைத்தால் போதும்; இப்பிரச்னைகளிலிருந்து விடுபட்டு விடலாம். உடல் பருமனுடன் உள்ளவர்களின் ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன், ஆபத்தான அளவில் குறைந்து காணப்படும். மூக்குக் கவசக் கருவி மூலம், தொடர் நேர் அழுத்த சுவாசம் (கன்டின்யுவஸ் பாசிட்டிவ் பிரெஷர் வென்டிலேஷன்) மேற்கொண்டால், ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அதிகரிக்கும். தேவையான இடத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் புதிய கருவிகள் தற்போது கிடைக்கின்றன. அறையில் உள்ள ஆக்சிஜனை உள்ளிழுத்து, நம் மூக்கின் வழியே உடலுக்குச் செலுத்தும் இவற்றை வீட்டிலும் வைத்துக் கொள்ளலாம். குறட்டையைக் குறைக்க மேலும் சில கருவிகள் விளம்பரப்படுத்தப்படுகின்றன. டி-ஷர்ட்டின் பின்புறம், டென்னிஸ் பால் தைத்துக் கொள்ளுதல், விசேஷ தலையணை, கழுத்துப் பட்டைகள், நாக்கை அழுத்திப் பிடிக்கும் கருவிகள் என, பல வகைகள் உள்ளன. இவற்றின் நம்பகத் தன்மை, விவாதத்துக்கு உரியது. குறட்டை விடுபவரை, ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்திற்குத் திருப்பி படுக்க வைத்தாலே, குறட்டை ஒலி குறையும். 'ஸ்பைரோ மீட்டர்’ கருவியால் மூச்சுப் பயிற்சி செய்தல், புட்பால் ஊதுதல், புல்லாங்குழல் ஊதுதல் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை, தினமும் 30 நிமிடம் மேற்கொண்டால், குறட்டை குறைகிறது என்பது, ஆய்வில் கண்டறிந்த உண்மை. யோகாவில் உள்ள மூச்சுப் பயிற்சியும் மிகச் சிறந்தது. தினமும் 45 நிமிட யோகா, மூச்சுப் பயிற்சியுடன் கூடிய நடைபயிற்சி போன்ற பழக்கங்களை, சிறு வயது முதலே கடைபிடிக்க வேண்டும். இதனால், இளவயது பருமனைக் குறைக்கலாம்; திடீர் மரணத்தையும் தவிர்க்கலாம். மனிதர்களின் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு நேரத்தை தூக்கத்தில் செலவிடுகின்றனர், சராசரியாக ஒரு மனிதர் 60 ஆண்டுகள் இவ்வுலகில் வாழ்கின்றார் என்றால் 20 வருடங்கள் தூக்கத்தில் கழிகிறது. இந்த தூக்கத்திற்காகவே இரவினை உண்டாக்கியதாக அல்லாஹ் தன் திருமறையில் கீழ்கண்ட வசனங்களில் குறிப்பிடுகின்றான்: இன்னும், அவன் தன் ரஹ்மத்தினால் உங்களுக்கு இரவையும், பகலையும் உண்டாக்கினான்; (இரவு) நீங்கள் அதில் ஓய்வு பெறும் பொருட்டு, (பகல்) நீங்கள் அதில் அவன் அருளைத் தேடும் பொருட்டும், (உண்டாக்கினான். இதற்காக அவனுக்கு) நன்றி செலுத்துவீர்களாக! (அல்-குர்ஆன் 28: 73) மேலும், உங்களுடைய தூக்கத்தை இளைப்பாறுதலாக ஆக்கினோம். (அல்-குர்ஆன் 78: 9) மேற்கூறிய அல்-குர்ஆனிய வசனங்களில் தூக்கத்தை இளைப்பாறுதலாக ஆக்கியிருக்கிறான் அல்லாஹ். ஆனால் அந்த தூக்கத்தில் மனிதர்கள் தன்னை அறியாமலேயே ஏற்படக்கூடிய ஒரு பிரச்சினைதான் குறட்டை. குறட்டை பிரச்சினையால் இரவு, பகல் என்று பாராமல் எந்த நேரத்தில் தூங்கினாலும் பக்கத்தில் படுத்திருப்பவர்(கள்) பாடு படுதிண்டாட்டம்தான். ஆக, குறட்டை பிரச்னைப்பற்றி இத்தொகுப்பில் பார்ப்போம். பொதுவாகக் குறட்டை வயதானவர்களுக்கு மட்டும்தான் வரும் என்ற எண்ணம் எல்லோரிடமும் இருக்கிறது. இது தவறு, வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் குறட்டை வரும். அதாவது, சுவாசிக்கும் போது வெளியேறும் சப்தத்தைத்தான் குறட்டை என்கிறோம். குரல்வளை சுருங்கும் போது வெளியேறும் மூச்சுக் காற்றின் இயல்பான அளவு குறைந்த சத்தத்தை உண்டாக்குகிறது. தொண்டையின் சுவர்களில் இருக்கும் அண்ணங்களிலிருந்தும் சப்தம் உற்பத்தியாகும். குழந்தைகளிடமும் குறட்டைப் பிரச்னை உண்டு, இதற்கு முக்கியக் காரணம் அடிநாய்டுகள் தான். குழந்தைகளது தொண்டையின் மேல் பகுதியில் அடிநாய்டுகள் மிகப் பெரிய அளவில் இருக்கும். இதனால் குறட்டை வரும். இரண்டு டான்சில்களும் சந்திக்கும் இடத்திலிருந்தும் குறட்டைச் சப்தம் வர வாய்ப்பு உண்டு. அதிக உடல் எடை குறட்டைக்கு முக்கியக் காரணம், இதனால் உடலில் தேவையற்ற கொழுப்பு சேர்ந்துவிடும். முறையான உணவுப் பழக்கம் இல்லாதவர்கள் இந்த குறட்டைப் பிரச்னையால் பாதிக்கப்படுவதுண்டு. குறட்டையில் மூன்று வகை உண்டு. முதலாவது மூளையின் மத்தியப் பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக உண்டாவது, இரண்டாவது அப்ஸ்ட்ரக்டிவ் டைப், இது கொஞ்சம் கடுமையானது. இந்த வகையில் இயல்பான மூச்சிவிடுவதில் சிரமம் ஏற்படும், மூன்றாவது வகை மிகிஸ்ட் டைப், இது முதலிரண்டு வகையின் கூட்டணி Positive airway pressure காரணமாகவும் குறட்டை வரும். பாலிஸோம்னோகிராபி என்ற டெஸ்ட்டுகள் மூலம் குறட்டை மூச்சுக் குழாயில் காற்று உட்புகும் தன்மை கால்களின் இயக்கம் அல்லது அசைவு உடலின் இயங்கு நிலை, நாடித்துடிப்பு, ஆக்ஸிஜன் சமச்சீரான நிலை உள்ளிட்டவற்றை கண்காணித்து தெரிந்துக் கொள்ள முடியும். முன்பெல்லாம் குறட்டைக்குச் சிகிச்சை கிடையாது, ஆனால் இப்போது நிறைய யுருலோ டயாலிட்டோபேரிங்கோ பிளாஸ்டி இது ஏதோ பிளாஸ்டிக் சர்ஜரியோ என்று எண்ணி விடாதீர்கள். தொண்டையில் செய்யப்படும் ஆபரேஷன்தான் இது. தவிர ரேடியோ ஃப்ரிக்குவின்சி முறை (Radio Frequency Method) எனப்படும் நவீன சிகிச்சையும் வந்திருக்கிறது. இம்முறைகளின் மூலம் குறட்டையை பெருமளவு கட்டுப்படுத்திவிட முடியும். இவை இரண்டுமே ஆபரேஷன் செய்து குறட்டையை குறைக்கும் முயற்சிதான். நல்ல தேர்ந்த டாக்டரிடம் மட்டுமே இந்த ஆபரேஷனைச் செய்து கொள்ள வேண்டும். இல்லையேல் வேறு பாதிப்புகள் உண்டாகும் ஆபத்து உண்டு. மேலும் குறட்டையை தவிர்க்க உடல் பருமனாகாமல் தவிர்த்து விடுவது அவசியம். அதுபோல் நாள்பட்ட அலர்ஜி இருப்பவர்கள் உடனடியாகச் சிகிச்சை எடுப்பது நல்லது. கழுத்து தொண்டையின் மேல் பகுதியில் கொழுப்புச் சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். முறையான மூச்சுப் பயிற்சி எடுப்பதாலும் குறட்டையை தவிர்க்க முடியும். அது மட்டுமில்லாமல் மது அருந்தும் பழக்கம் இருக்கவே கூடாது, போதை மாத்திரைகள் மற்றும் மயக்கம் தரும் மருந்துக்கள் உட்கொள்ளவே கூடாது.

Related

மருத்துவ டிப்ஸ் 8395905308740167938

Post a Comment

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம்! முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item