குஜராத் கச்சி பாடியா--சமையல் குறிப்புகள்
குஜராத் கச்சி பாடியா தேவையானவை: சின்ன உருளைக்கிழங்கு, சின்ன வெங்காயம், கத்திரிக்காய் - தலா கால் கிலோ, வாழைக்காய் - 2, கடலை மாவு - ஒரு கப், ...
https://pettagum.blogspot.com/2011/09/blog-post_1366.html
குஜராத் கச்சி பாடியா
தேவையானவை: சின்ன உருளைக்கிழங்கு, சின்ன வெங்காயம், கத்திரிக்காய் - தலா கால் கிலோ, வாழைக்காய் - 2, கடலை மாவு - ஒரு கப், தேங்காய் விழுது - கால் கப், தனியாத்தூள், சீரகத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், இஞ்சி - பச்சை மிளகாய் விழுது - 2 டீஸ்பூன், சர்க்கரை - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள்- அரை டேபிள்ஸ்பூன், எலுமிச்சம்பழம் - ஒன்று, கடுகு, வெந்தயம் (கலந்தது) - அரை டீஸ்பூன், கீறிய பச்சை மிளகாய் - 2, கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: உருளைக்கிழங்கு, வாழைக்காயை தோல் சீவி நீளவாக்கில் நறுக்கவும். கத்திரிக் காயை காம்பு நீக்கி, நீளமாக நறுக்க வும். ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, சிறிதளவு எண்ணெய், தேங்காய் விழுது, தனியாத்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கலந்து கொள்ளவும். இந்தக் கலவையுடன் நறுக்கிய வாழைக்காய், உருளைக்கிழங்கு, கத்திரிக்காய் சேர்த்துப் பிசிறவும்.
கடாயில் கொஞ்சம் அதிகமாக எண்ணெய் விட்டு... கடுகு, வெந்தயம், இஞ்சி - பச்சை மிளகாய் விழுது, கறிவேப்பிலை, கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு வெங்காயம், மசாலா பிசறிய காய்கள் சேர்த்து வதக்கவும் (பிசிறிப் போடும்போது பாத்திரத்தில் மீதமாகி இருக்கும் மசாலாவையும் சேர்த்து வதக்கவும்). வெந்த பிறகு சர்க்கரை தூவிக் கிளறி, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து, கொத்தமல்லி சேர்த்து இறக்கவும். இது, சப்பாத்திக்கு சூப்பரான சைட் டிஷ்.
குஜராத் கச்சி பாடியா: சிறிதளவு நறுக்கிய பனீர் சேர்த்தால், ரிச்சான சுவையுடன் இருக்கும்
Post a Comment