வஞ்சிர மீன் கறிவேப்பிலை வறுவல்...சமையல் குறிப்புகள்
வஞ்சிர மீன் கறிவேப்பிலை வறுவல் தேவையானவை வஞ்சிர மீன் - 4 துண்டு எலுமிச்சம் பழச்சாறு - 2 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது மிளகாய்த் தூள் - 25...
https://pettagum.blogspot.com/2011/09/blog-post_5766.html
வஞ்சிர மீன் கறிவேப்பிலை வறுவல்
தேவையானவை
வஞ்சிர மீன் - 4 துண்டு
எலுமிச்சம் பழச்சாறு - 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
மிளகாய்த் தூள் - 25 கிராம்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
தனியாத் தூள் - 10 கிராம்
மிளகுத் தூள் - 5 கிராம்
சீரகத் தூள் - 5 கிராம்
அரிசி மாவு - 10 கிராம்
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை
* மேலே குறிப்பிடப்பட்டுள்ள மசாலாவைச் சேர்த்து மீனை ஊற வைக்கவும். உப்பை சரிபார்க்கவும். இந்தக் கலவையை ஒரு மணி நேரம் வைத்திருக்கவும்.
* கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மீன் துண்டுகளைப் போட்டுப் பொரித்தெடுக்கவும். எண்ணையில் பொரித்தெடுத்த கறிவேப்பிலையை, மீன் துண்டுகளின் மீது தூவி விடவும்.
* எலுமிச்சை துண்டுகளை வைத்து பரிமாறலாம்.
* இது சாதம் சாம்பாருடன் சாப்பிடவும், வெறுமனே சாப்பிடவும் சுவையானதொரு வறுவலாகும்.
குறிப்பு
* மீன் கலவையை ஊற வைக்க சிறிது இஞ்சி, பூண்டு விழுதும் தேவையானால் சேர்க்கலாம்.
* இதே முறைப்படி இறாலைக் கொண்டு கறிவேப்பிலை பிரான்ப்ரையும் தயார் செய்யலாம்.
Post a Comment