ஆமை வடை தேவையான பொருட்கள்: கடலைப்பருப்பு - அரை கப் உளுத்தம்பருப்பு - அரை கப் துவரம்பருப்பு - அரை கப் பச்சைமிளகாய் - 6 மிளகு - ஒரு தேக்கரண...
ஆமை வடைதேவையான பொருட்கள்:கடலைப்பருப்பு - அரை கப்உளுத்தம்பருப்பு - அரை கப்துவரம்பருப்பு - அரை கப்பச்சைமிளகாய் - 6மிளகு - ஒரு தேக்கரண்டிசீரகம் - ஒரு தேக்கரண்டிமஞ்சள்பொடி - கால் தேக்கரண்டிபுளி - சிறு நெல்லிக்காய் அளவுஉப்பு - 2 தேக்கரண்டிஎண்ணெய் - 2 கப்செய்முறை:
கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு இவை மூன்றையும் ஊறவைத்து, நன்றாக ஊறியபின் நீரை வடித்துவிட வேண்டும். பருப்புகளுடன், பச்சை மிளகாயையும், உப்பையும் சேர்த்து அம்மியில் வைத்து கரகரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு, சீரகம், மிளகினை இலேசாக உடைத்து மஞ்சள்பொடியுடன் அரைத்து வைத்துள்ள பருப்பில் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். மாவினை எலுமிச்சை அளவிற்கு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ள வேண்டும். வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், புளியினைப் போட்டு முறித்து, நுரை அடங்கியவுடன், உருட்டி வைத்துள்ள உருண்டைகளை ஒரு வாழை இலையில் வடைகளாக தட்டிப்போட்டு வேகவைத்து எடுக்க வேண்டும்.
Post a Comment