புதிய வசந்தம் --கவிதைத்துளிகள்
புதிய வசந்தம் புதிய மாறுதல்கள் வரவிருக்கின்றது பூபாள ராகம் தொடங்குகின்றது பெண்மை பொலிவு பெருகின்றது கண்ணிமை கனவைத் தொடுகின்றது ...
புதிய வசந்தம்
பூபாள ராகம் தொடங்குகின்றது
பெண்மை பொலிவு பெருகின்றது
கண்ணிமை கனவைத் தொடுகின்றது
வானவில் வர்ணத்தில் தோரணமா?
மனதில் புகுந்து ஆசைக் குயில்கள்
இசைத்து மகிழும் நாயனமா?
அழிந்திடாத மனதிற்கு சொந்தம்
கதுப்புகள் சிவக்க உடலும் சிலிர்க்க
ஆரம்பமாகும் இளைய வசந்தம்
கண்கள் நான்கும் மறந்திடும் நித்திரை
அந்தி பொழுது மலரும் மல்லிகை
அங்கே வந்து சொல்லும் வாழ்த்துரை
தோல்வி கண்டு துவளும் தோகை
உணர்ச்சிக் கலவை உள்ளம் வருட
பூரிப்பில் முகத்தில் நாண ரேகை
உறவில் மலர்ந்த உணர்வில் கொண்டாட்டம்
இன்பம் பகிர்ந்து எழுந்து தாலாட்டும்
இனம் புரியாத எண்ணவோட்டம்
எண்ணச்சிறகில் ஏறிடும் பயணம்
முடிவில்லாத உதயங்கள் நோக்கி
மதிவதனத்தின் காலடி சரணம்.
நீலவொளியில் நிலவு மலரும்
சீராய் பரவிடும் சிந்தனை போலே
இன்ப உணர்வு என்றும் தொடரும்.
Post a Comment