சாஸ்னி மக்மல் பூரி --வாசகிகள் கைமணம்
சாஸ்னி மக்மல் பூரி தேவையானவை: மைதா - 250 கிராம், அரிசி மாவு - 50 கிராம், தேங்காய் மூடி - ஒன்று, சர்க்கரை - 250 கிராம், நெய் - ஒரு கப்...
செய்முறை: தேங்காயை துருவி அரைத்து பால் எடுக்கவும், மைதா, தேங்காய்ப் பால், சிறிது உப்பு சேர்த்து பூரி மாவு போல பிசையவும். பிறகு மாவை சிறு உருண்டைகள் போல் செய்யவும். அரிசி மாவுடன் நெய்யைக் கலந்து குழைத்து வைக்கவும். மைதா உருண்டைகளை பூரியாகத் தேய்த்து, ஒரு பூரியின் மேல் அரிசி மாவு - நெய் கலவையை தடவி, அதன்மேல் மற்றொரு பூரியை வைத்து, மறுபடியும் நெய் கலவையை தடவி, மேலே வேறொரு பூரி வைக்கவும். இப்படி மொத்தம் ஐந்து பூரிகளை வைத்து சுருட்டவும். அதை நான்கு துண்டுகள் போட்டு, ஒவ்வொரு துண்டையும் மறுபடி பூரியாகத் தேய்க்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் பூரிகளைப் போட்டு ஒவ்வொன்றாக பொரித்து எடுக்கவும்.
Post a Comment