முளைப்பயிறு சப்பாத்தி--சமையல் குறிப்புகள்
அம்மா! செஞ்சுதாங்க ப்ளீஸ்! இது முளைப்பயிறு சப்பாத்தி செய்முறை நேரம். தேவையானப் பொருட்கள்: <முளைத்த பச்சைப்பயிறு 3/4 கப், பெரிய வெங்காயம...
இது முளைப்பயிறு சப்பாத்தி செய்முறை நேரம்.
தேவையானப் பொருட்கள்:
<முளைத்த பச்சைப்பயிறு 3/4 கப், பெரிய வெங்காயம் 1, நாட்டுத் தக்காளி 2, கரம்மசாலா பொடி, சீரகப் பொடி, மிளகாப் பொடி தலா 1/2 டீஸ்பூன், மஞ்சள் பொடி 1/4 டீஸ்பூன், பூண்டு 4 பல், உப்பு ருசிக்கேற்ப.
செய்முறை: கோதுமை மாவில் உப்பு 1 ஸ்பூன். எண்ணை ஊற்றி பிசைந்து எடுக்கவும்.
*முளைப்பயிறை ஆவியில் வேகவைக்கவும்.
*வாணலியில் சிறிதளவு எண்ணை விட்டு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு இவற்றை வதக்கவும். பின் பொடியாக நறுக்கிய தக்காளியைப் போட்டு நன்கு வதக்கவும்.
* வதங்கிய பின் பொடி வகைகளைச் சேர்த்து சற்று நீர் தெளித்து, பச்சை வாடைப் போக வதக்கவும்.
*வேக வைத்துள்ள பச்சைப் பயிறை சற்று மசித்து, வதக்கிப் பொருட்களுடன் சேர்த்து கிளறவும்.
தேவையான உப்பு சேர்த்து கலந்து, வாணலியில் எல்லாம் ஒன்றாக சேர்த்து கிளறி வதக்கி இறக்கி ஆற வைக்கவும். (பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை சேர்க்கலாம்) இரு மெல்லிய சப்பாத்திகள் இடவும்.
ஒரு சப்பாத்தி நடுவே பூரணத்தை பரவலாக வைத்து, மேலே இன்னொரு சப்பாத்தி வைத்து மூடி, ஓரங்களை ஒட்டி, தோசைக் கல்லில் போட்டு இருபுறமும் வெந்தபின் எடுக்கவும்.
இதற்கு சைடிஷ்ஷே தேவையில்லை. சுவையான சத்தான சப்பாத்தி. இதை அப்படியே சாப்பிடலாம்.
Post a Comment