மட்டன் புலாவ் செய்து பார்ப்போமா?--சமையல் குறிப்புகள்-அசைவம்!
ஆட்டு இறைச்சி புரதச் சத்து நிறைந்தது. இதனை உணவோடு சமைத்து சாப்பிடும்போது கூடுதல் சுவையை தரும். விழா காலங்களில் மட்டன் பிரியாணி சமைத்து ...
தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி - அரைக் கிலோ
ஆட்டுக்கறி - அரைக் கிலோ
பெரிய வெங்காயம் - இரண்டு
நறுக்கிய பச்சைமிளகாய்-நான்கு
இஞ்சி, பூண்டு விழுது - 4 டீ ஸ்பூன்
மிளகு - அரை டீ ஸ்பூன்
தனியாத்தூள் - இரண்டு டீ ஸ்பூன்
மிளகாய்த்தூள்- ஒரு டீ ஸ்பூன்
மஞ்சத்தூள் - ஒரு டீ ஸ்பூன்
கரம் மசாலா- அரை டீ ஸ்பூன்
முந்திரி, கிஸ்மிஸ்பழம் : கால் கப்
கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
புதினா- ஒரு கைப்பிடி
எலுமிச்சை சாறு- ஒரு பழம்
பட்டை,கிராம்பு,ஏலக்காய்-தலா நான்கு
மராட்டி மொக்கு-இரண்டு
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு தேவையான அளவு
புலாவ் செய்முறை:
பாஸ்மதி அரிசியை கழுவி ஊறவைக்கவும்.
ஆட்டுக்கறியை சுத்தமாக கழுவி சற்று பெரிய துண்டுகளாக நறுகவும். அதில் இஞ்சி பூண்டு விழுதில் பாதியளவு மற்றும் மிளகு, சிறிது உப்பு, ஆகியவற்றைச் சேர்த்து குக்கரில் 5 விசில் விட்டு வேகவைக்கவும். விசில் இறங்கிய உடன் மட்டன் துண்டுகளை தனியே எடுத்துவைக்கவும்.
குக்கரில் எண்ணெயை காயவைத்து பட்டை, கிராம்பு, மராட்டி மொக்கு உள்ளிட்ட வாசனைப் பொருட்களைப் போட்டு தாளிக்கவும். வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும். அதில் மீதமுள்ள இஞ்சிபூண்டு விழுது பச்சைமிளகாய் புதினா கொத்தமல்லி ஆகியவற்றைப் போட்டு வதக்கவும். இதனுடன் மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலா உள்ளிட்ட மசாலா பொடிகளை போட்டு வதக்கவும். இதனுடன் வேகவைத்த மட்டன் துண்டுகளைப் போட்டு நன்கு கிளறவும். பின்பு அதில் மட்டன் வேகவைத்த தண்ணீர் உடன் ஒரு கப் அரிசிக்கு ஒன்றேகால் கப் வீதம் தண்ணீரை அளந்து ஊற்றவும். உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
மசாலா நன்கு கொதித்ததும் ஊற வைத்துள்ள அரியை கொட்டி குக்கரை மூடவும். விசில் போடவேண்டாம். ஆவி வரும் போது விசில் போட்டு அடுப்பை மிதமாக எரிய விடவும். சரியாக 10 நிமிடத்தில் அடுப்பை நிறுத்தி விடலாம். நன்றாக புலாவ் பொல பொலவென சூப்பராக வெந்திருக்கும். குக்கர் மூடியை திறந்து எலுமிச்சை சாற்றை மேலாக தெளிக்கவும்.
கடைசியில் முந்திரி, கிஸ்மிஸ்பழத்தை நெய்யில் பொரித்து அலங்கரித்து பரிமாறவும்.
1 comment
Hi I am a regular follower of ur blog.. all your recipes are mouth watering and healthy.. Could you pls write a post regarding healthy weight gain?
Post a Comment